நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் 110 க்கும் மேற்பட்டோர். வென்று இருந்தனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் விஜய் இவர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.



இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தளபதி மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் செய்வார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தளபதியை (நடிகர் விஜய்யை) சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரிடமும் நின்று விஜய் குருப் போட்டோ எடுத்துக் கொண்டார். 



உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை விஜய் தனித்தனியாக சந்தித்து பேசினார். மக்களை அணுகியது எப்படி? தேர்தலுக்கு தயாரானது எப்படி? போன்ற தகவல்களை விஜய் அவர்களிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு சால்வை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஜய் படம், மக்கள் இயக்கத்தின் கொடியை வைத்து நங்கள் ஓட்டு கேட்டோம். எங்களை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் உள்ளாட்சி தேர்தலில் இரண்டு தலைவர்கள் 12 துணை தலைவர்கள் மீதம் உள்ள நபர்கள் வார்டு உறுப்பினராக பதவி ஏற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.

 

விஜய் வேண்டுகோள்

 

மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டுள்ளார்கள். எனவே மக்களுக்கு தேவையான விஷயங்களை, உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்'' என்று விஜய் அவர்களுக்கு உத்தரவிட்டார். ''நாங்கள் உங்கள் பெயரை கண்டிப்பாக காப்பாற்றுவோம்'' என்று தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விஜய்யிடம் தெரிவித்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட வாரியாக, வர்த்தக அணி உள்பட பல்வேறு அணிகளுக்கு தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட எந்த முடிவையும் எடுக்க முடியாது. விஜய்தான் எங்களுக்கு தலைவர். அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நாங்கள் செய்வோம். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.


மயங்கி விழுந்த பெண்

 

 

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு பதிலாக அவரது சகோதரர் எழில் தனது மனைவியுடன் விஜயை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில், நீண்ட நேரமாக வெளியே காத்திருந்தார்.



இந்நிலையில் அவரது மனைவி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அவரை தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். தனது மனைவி மயக்கம் அடைந்த பிறகும் மாநில பொறுப்பாளர்கள் யாரும் வெளியில் வந்து பார்க்கவில்லை என்று கோபமடைந்த எழில், மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால் விஜய் ரசிகர்கள் சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதி தொடர்ந்து பதட்டமாக  காணப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண