தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிபேட், திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 11 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் இது முற்றிலும் இயல்பான ஒரு விஷயம் தான் என தெரிவிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் இது தொடர்பாக பேசுகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்வதால் மழை பெய்ததாக தெரிவித்தார்.


அதேசமயம் அக்டோபர் மாதம் முதல் இந்த முறை முற்றிலுமாக மாறி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் அளவு குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். அக்டோபர் 15 ஆம் தேதி ஒட்டி வடகிழக்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் அக்டோபர் மாதம் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அக்டோபர் மாதம் தொடங்கிய முதல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதேவேலையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. 


Teachers Strike: டெட் ஆசிரியர்கள் சங்க போராட்டமும் வாபஸ்; ஆலோசனைக்குப் பிறகு முடிவு


Annamalai: "யார் போனாலும் வருத்தம் இல்லை; 2024ல் தெரியும்" - அதிமுக கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை பளீச்!


Pradeep Anthony: பெண்கள் பற்றி வன்மமான கமெண்ட்... பிக்பாஸ் வீட்டின் ஆதிகுணசேகரனாக மாறும் பிரதீப் ஆண்டனி!