சென்னை மாநகர காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஜூன் 21-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்தது. இதன்பேரில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் முறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வானகத் தணிக்கை சாவடிகள் அமைத்து, விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


கடந்த ஒரு வாரத்தில் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 556 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 ஆட்டோக்கள் என மொத்தம் 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது 1018 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் மீது 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.




பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றைத் தடுக்க சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்