Breaking News LIVE : ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் அரசே செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்த்ரவு!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஜான்சி ராணி Last Updated: 20 May 2023 05:49 PM
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதை கண்காணியுங்கள் - அண்ணாமலை

தமிழ்நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள்  திரும்பப் பெறப்படுவதை  கண்காணிக்க கோரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”பணப்பரிமாற்றத்தை வங்கிகள் கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாய் நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் கடைகளில் மாற்ற வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.”

Breaking News LIVE : மாநிலக் கல்விக்கொள்கை குழுவில் தலையீடா? அமைச்சர் அன்பில் விளக்கம்; 2 உறுப்பினர்களைச் சேர்த்து உத்தரவு

மாநிலக் கல்விக்கொள்கை குழுவில் அரசு அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புதிதாக 2 உறுப்பினர்களைச் சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Background

RTE students: இந்த மாணவர்களுக்கு அரசேதான் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் சீருடைக்கான கட்டணங்களை அரசேதான் செலுத்த வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


உரிய அறிவுரைகளை 2 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவனைச் சேர்த்த தந்தை ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


 ராகுல்காந்தியின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து..! என்ன காரணம்...?


நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (மே 21-ந் தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், ராகுல்காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்துசெய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்து உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ராகுல்காந்தியால் நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.


வானிலை நிலவரம்:


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றும் நாளையும் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


21.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


22.05.2023 முதல் 24.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 




 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.