Breaking News LIVE : மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாடத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாத நிலையில், தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அனிதாவின் அண்ணண் மணிரத்தினம் முதல்வர், அமைச்சர்களுக்கு நன்று தெரிவித்துள்ளார். அனிதா பெயரில் நினைவு அரங்கம் திறந்து வைத்ததற்கு வீடியோ வெளியிட்டு சகோதரர் மணிரத்தினம் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தைத் தடுக்க பரிந்துரைகளை அளித்த திருப்புகழ் குழுவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஐந்து பேர் கைதான நிலையில், தற்போது சிராஜுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தெரு நாய்கள் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு, தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் நகைக்கடையில் ரூ.6 கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வின் 2வது நாளையொட்டி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஸ்ரீகாந்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படுகிறது. ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்ட அரங்குக்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்ட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கிய 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு - ஒரு கிராம் தங்கம் 5,390க்கும், சவரன் ரூ.43,120க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தேர்வு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார்
ஆஸ்கர் பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப் படத்தில் நடித்த பெள்ளியை தொலைபேசியில் அழைத்து, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. சுமார் 10 ஆயிரம் பைபர் படகுகள், 350 விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை : சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம் குளறுபடியால் சென்னையில் முக்கிய பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பப்புவா நியூ கினியா தீவில் போர்ட் மோர்ஸ்பி பகுதியில் நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. 1வது நிலையின் 2வது அலகில் நிலக்கரி பிரிவில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்ஙகியது.
Background
கோவை நீதிமன்றம் அருகே கடந்த பிப்ரவரி 13 ம் தேதி பட்டப்பகலில் கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். குரங்கு ஸ்ரீராம் என்னபவரை கொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கொலை குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலகிரியில் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் என்பதும், அவர்கள் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மேட்டுப்பாளையம் வன கல்லூரி முன்பாக கெளதம், ஜோஸ்வா ஆகியோர் திடீரென வாந்தி, தலை சுற்றுதல் ஏற்படுவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென வற்புறுத்தி வாகனத்தை நிறுத்தி இருவரும் தப்பிச் செல்ல முயன்றதாகவும், காவலர்கள் அவர்களை விரட்டும் போது ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஒரு காவலரை தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினர் எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக இருவரையும் காலில் துப்பாக்கியால் எஸ்.ஐ. சுட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கொலை செய்ய உதவியதாகவும், வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தகாவும் மேலும் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சூர்யா, கார்த்திக் பாண்டியன், டேனியல் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 3 பேருக்கும் கோவை மாநகர காவல் துறையினர் வழங்கினர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -