Breaking LIVE : ஹிஜாப் வழக்கு - இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு 

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 13 Oct 2022 12:39 PM
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் 

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; நாளை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம் - அரசு பதில்

நளினி ரவிச்சந்திரனை விடுவிக்கக்கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் - தமிழக அரசு பதில்

பப்ஜி விவகாரத்திற்கு முடிவு கட்டியே தீருவோம் - நீதிபதிகள்

தடை விதிக்கப்பட்ட பின்னரும் பப்ஜி, ஃப்ரீ பயரை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீருவோம் - நீதிபதிகள்

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா?

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா என கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் இருந்து 12 பேர் நீக்கம் 

அதிமுக நிர்வாகிகள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.


வேலூர், திருச்சி புறநகர், ஈரோடு, மதுரை புறநகர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 12 பேர் நீக்கம் - இபிஎஸ்

ஹிஜாப் வழக்கு - இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு 

கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு. 

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து 62,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கிவைத்தார்

இமாச்சல் முதல் புதுடெல்லி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது.


இந்தியாவின் 4வது வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்கும் நிகழ்வில் இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

தமிழ்நாட்டில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

4-வது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!

இந்தியாவின் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை ஹிமாச்சலத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி  வைக்கிறார். 

Background

Petrol, Diesel Price : நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படததால், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 145வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.




இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 145வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.13) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.