Breaking News LIVE : உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானர்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
Sarath Babu Death: உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானர்!
Youtuber Irfan on Governor RN Ravi: திடீரென ஆளுநரைச் சந்தித்த பிரபல யூ ட்யூபர் இர்ஃபான்.. காரணம் இதுதானாம்..
நடிகர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி
நடிகர் மனோபாலா உடல், நாளை வளசரவாக்கம் மின் மயானத்தில் 10 மணிக்கு தகனம் செய்யப்படும் என தகவல்..
சென்னை வடபழனியில் உள்ள இல்லத்தில் இயக்குநர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
என் மாணவர் மனோபாலா மறைவு எனக்கும் தமிழ்திரை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.
அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் பழனி பேருந்து நிலையம் அருகே பிரபல ரவுடி வடிவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுடன் பி.டி.உஷா சந்தித்துள்ளார்.
தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரப்படத்திற்கு தடை கோரிய மற்றொரு வழக்கையும் விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறு கூறியது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் வாங்க திரண்டிருந்த ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.
கோவையில் பெய்த கனமழை காரணமாக மதுக்கரையில் தரைப்பாலம் உடைந்து அடித்து செல்லப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியில், சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று சேப்பாக்கத்தில் தொடங்கிய நிலையில் ஆன்லைனில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
இந்தியாவில் நேற்று 3,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 3,720 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ. 45,648-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ரூ.5,706-க்கு விற்பனையாகிறது.
மிசோரம் அய்சாவில் 200 சோப்பு டப்பாக்களில் கடத்தப்பட்ட ரூ.12.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 மாதத்துக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது.
’தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், கயத்தாறில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர்வரத்து 1,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்து வருகிறது.
சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60 இடங்களில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (மே.3) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 347ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -