Breaking News LIVE: முதல்வரின் கிராமப்புறசாலை மேம்பாடு எனும் புதிய திட்டம்..!

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 28 Mar 2023 09:49 PM
எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்

ஓ.பன்னீர்செல்வத்தின்  மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு  வர உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு  தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ்  தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் மனு மீது தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும்  பிறப்பிக்கக் கூடாது என, ஈபிஎஸ்  சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் குழந்தையை விற்க முயன்ற 4 பேர் கைது

மதுரையில் பிறந்து 3 நாட்களே ஆன  பெண் குழந்தையை விற்க முயன்ற செவிலியர், மூதாட்டி உள்ளிட்ட 4 பெண்கள் கைது. மதுரை அரசு மருத்துவமனையில்  குழந்தைகள் வார்டு அருகே சந்தேகிக்கும் வகையில்  நின்றிருந்த மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை விற்க முயன்றது அம்பலம்.

Breaking News LIVE: வந்தேபாரத் ரயில் மீது கல் வீசியவர் கைது!

வாணியம்பாடி திருவாஞ்சோலையில் சென்னை- பெங்களூரு வந்தேபாரத் ரயில் மீது கல்வீசியவர் கைது.

முதல்வரின் கிராமப்புறசாலை மேம்பாடு எனும் புதிய திட்டம்..!

முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: பாடி தனியார் தொழிற்சாலைள குப்பை கிடங்கில் தீவிபத்து - தீயணைக்கும் பணி தீவிரம்!

சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் தனியார் தொழிற்சாலையில் உள்ள குப்பை கிடங்கில் தீவிபத்து. குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவள்ளூர் கரகம்பாக்கம் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: உள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு; எடியூரப்பாவின் வீட்டில் கல்வீச்சு - கலவர பூமியாகிறதா கர்நாடகா?

கர்நாடகாவில் இடஒதுக்கீடு தொடர்பான முன்னாள் நீதிபதி சதாசிவன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக்கோரி, ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ்.எடியூரப்பாவின் வீட்டின் வெளியே மாபெரும் போராட்டம் நேற்று நடைபெற்றது. 


இந்த போராட்டத்தின்போது பஞ்சாரா சமூகத்தினர் எடியூரப்பாவின் வீட்டை திடீரென குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில், சில காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. கர்நாடக அரசு அறிவித்துள்ள பட்டியல் சாதியினருக்கான (எஸ்.சி) உள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 

Breaking News LIVE: கோவையில் ஏப்ரல் 1 முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE:ர ஜினி மகள் வீட்டில் திருடிவருக்கு 2 நாள் போலீஸ் காவல்!

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வர் என்ற பெண்ணை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி 

Breaking News LIVE: வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்கள் ரகளை !

வேலூரில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இ இருந்து 6 சிறார் குற்றவாளிகள் நேற்று தப்பிய நிலையில், பாதுகாப்பு இடத்தில் தற்போது ரகளை. இல்லத்தில் பொருட்களை உடைத்து சிறார்கள் தாக்குதல் நடத்தியிள்ளனர். கோட்டாட்சியர் கவிதா கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்திஒ வருகிறார். 

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டதால் இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பொதுச்செயலாளர் - அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஓபிஎஸ் மேல்முறையீடு..!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தான் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஓ. பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார். 

தீர்ப்பின் எதிரொலி..!

தீர்ப்பின் எதிரொலியாக அதிமுக அலுவலகம் செல்கிறர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு தள்ளுபடி..!

ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Breaking News LIVE: புதுச்சேரி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது 

ஏப்ரல் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் இயங்காது - அதேசமயம் அவசர சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு  

Breaking News LIVE: பெரம்பூர் அதிமுக நிர்வாகி கொலை - சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது

பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று வேலை நிறுத்தம் 

பழைய ஓய்வூதிய திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று பணியை புறக்கணித்து அடையாள வேலை நிறுத்தம்

Breaking News LIVE: அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு.. இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதால் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Background

சென்னையில் 310 நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  முயற்சியில்  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (மார்ச் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 311வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.