News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ
X

Inter Caste Marriage: நக்மா முதல் நயன்தாரா வரை! திருமணத்திற்காக மதம் மாறிய தமிழ் சினிமா நடிகைகள்!

அப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களை போல திருமணத்திற்காக மதம் மாறிய சினிமா பிரபலங்கள் பலர் உள்ளனர்.

FOLLOW US: 
Share:

காதலுக்கு ஜாதி, மதம் போன்ற எதுவும் கிடையாது. எம்மதமும் சம்மதம் என்று நிரூபிக்கும் வகையில் பல்வேறு திருமணங்களை நாம் பார்த்துள்ளோம். அதில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் தங்கள் காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்துகொண்ட கதைகளும் உண்டு.

அந்த வகையில் 80 காலகட்ட தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சில நடிகைகளில் நடிகை குஷ்புவும் ஒருவர். இவருக்காக கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களும் அப்போது இருந்தனர். அப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களை போல திருமணத்திற்காக மதம் மாறிய சினிமா பிரபலங்கள் பலர் உள்ளனர். 

நக்மா

நடிகை நக்மாவின் தாய் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர், தந்தை இந்து மதத்தை சேர்ந்தவர்,  இவர் இந்த இரண்டு மதங்களிலும் இல்லாமல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டதால் இவர் மதம் மாறினார்.

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

ஜோதிகா

நக்மாவைப் போலவே அவரது தங்கையான, சினிமாவின் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்த ஜோதிகா தன் காதலுக்காக மதம் மாறினார். ஜோதிகா அம்மாவை போல முஸ்லீம் பெண்ணாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு

குஷ்பு பிறப்பால் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர், இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்த போது அவர் இந்து மதத்திற்கு மாறினார்.

மோனிகா

மோனிகா இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னதாக அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார்.

நயன்தாரா

நாம் நினைப்பதுபோல இப்போது அல்ல, பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காகவே இந்து மதம் மாறியவர் நயன்தாரா. கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் நடிகை நயன்தாரா இவர் நடிகர் பிரபுதேவாவை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்.

இவர்கள் தவிர அமைதிக்காக மதம் மாறிய வனிதா, கிறிஸ்தவ மத போதாகராக மாறிய மோஹிணி போன்றோர் கதைகளும் உண்டு. ஆனால் திருமணத்திற்காக ஒரு ஆண் நடிகர் மாறினார் என்ற கதை இதுவரை இல்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Published at : 09 Jun 2022 06:35 PM (IST) Tags: Nayanthara Vignesh Shivan marriage wedding religion Wikki Nayan

தொடர்புடைய செய்திகள்

45 திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா

45 திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா

R Sarathkumar: 71 வயதிலும் சிக்கென இருக்கும் சரத்குமார்.. காரணம் என்ன தெரியுமா?

R Sarathkumar: 71 வயதிலும் சிக்கென இருக்கும் சரத்குமார்.. காரணம் என்ன தெரியுமா?

Parasakthi Release Date: பராசக்தி படம் ரிலீஸ் தேதி மாற்றம்.. ஜனநாயகனுக்கு ஆப்பு!

Parasakthi Release Date: பராசக்தி படம் ரிலீஸ் தேதி மாற்றம்.. ஜனநாயகனுக்கு ஆப்பு!

ஆந்திராவில் ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்..பாலையா படம் அப்படியே காப்பியாமே

ஆந்திராவில் ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்..பாலையா படம் அப்படியே காப்பியாமே

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணியின் பிரம்மாண்ட அறிமுகம்

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணியின் பிரம்மாண்ட அறிமுகம்

டாப் நியூஸ்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?

JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்

JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்

TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?

TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!