உடல் அரசியல் உலகம் எங்கிலும் பேசப்பட்டு வருகிறது, ஆயினும் அதனுடைய கரங்களிலிருந்து பெரும் புள்ளிகளும் தப்ப முடியாது என்பது இன்னொரு முறையும் உறுதிபட்டிருக்கிறது. இணையத்தின் சமீபத்திய குறிக்கு ஆளாகியிருப்பது 2021-இல் உலகி அழகி பட்டம் வென்ற ஹர்நாஸ் சந்து. இந்தியாவிலிருந்து வந்து உலகி அழகி பட்டம் பேன்ற பெருமை இவரைச் சேரும். ஆனால், சமீபத்திய எடை உயர்வும் அதன் காரணமாக ஏற்பட்ட தோற்ற வித்தியாசங்களும் இவரை உடல் அரசியலின் பலிகடா ஆக்கியிருக்கிறது.


எனது உடல் எப்படி இருந்தாலும், அது எனது உடல், எல்லா மரியாதையும் அன்பும் கிடைக்க வேண்டிய உடல் என்று அவர் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அப்போது அவர் வெளியிட்டிருந்த மற்றொரு விஷயம், அவருக்கு சீலியாக் நோய் இருக்கிறது என்பது. புரதக் கூறுகளை செரிக்க சிரமங்கள் இருப்பது இந்த நோயின் மூலக்கூறு.


இதனால் குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ண இயலாது. குறிப்பாக, குளூட்டன் இருக்கும் உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளாது. இந்த நோய் இருப்பதும் இவரது உடல் உயர்வுக்கு மற்றொரு காரணம். அதனை இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டார்.


சீலியாக் நோய் என்பது என்ன?


உடல் புரதக் கூறுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒதுக்குவது தான் இந்த நோயின் மூலம். ஆதலால், குளூட்டன் உணவுகளை எடுத்துகொள்ள முடியாது. சிறுகுடலின் சிறு பகுதி குளூட்டனுக்கு எதிராய் செயல்படுவதால் சீரண செயல்பாடுகள் பாதிக்கப்படும்.



சீலியாக் நோய் இருந்தால் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாது?


கோதுமை


ரை


பார்லி


மால்ட்


ஈஸ்ட்


கோதுமை சார்ந்த மற்ற உணவுகள்


இந்த நோய் பெரும்பாலும் மரபு கூறுகள் வழியாய்க் கடத்தப்படும் குறைபாடு. குடும்பங்களில் தொடர்ந்திருந்தால், உங்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம். சீரணம் சார்ந்த அத்தனை பிரச்சனைகளும், உடல் எடை இழப்பும் இதன் அறிகுறிகள்.


மேலும் இதைப்படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்