எவர் சில்வர் பாக்ஸ் மூடி டைட்டாக இருந்தால்


நம் வீட்டு சமையலறையில், சீரகம், பருப்பு, மிளகு உள்ள்ளிட்ட பல்வேறு பொருட்களை சில்வர் பாக்ஸ்கள் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைப்போம். சில நேரம் சில்வர் பாக்ஸ்களின் மூடி மிகவும் டைட்டாக இருக்கும். இதனால் அதை திறக்க முடியாது. அப்படி டைட்டாக இருக்கும் பாக்ஸின் மூடியின் மூடும் இடத்தில் உள்பகுதியை சுற்றி வேஸ்லின் தேய்க்க வேண்டும். இதே போன்று அந்த பாக்ஸின் மேல்பகுதியிலும் மூடும் இடத்தின் வெளிப்புறத்திலும் வேஸ்லின் தேய்த்து விட வேண்டும். இப்போது இந்த பாக்ஸை மிக சுலபமாக மூடி திறக்க முடியும். 


மிக்ஸி ஜார் பிளேடுக்கு அடியில் உள்ள கரை நீங்க


சில மிக்ஸி ஜாரில் பிளேடுக்கு அடியில் விடாபிடியான கரைகள் இருக்கும். அதை நாம் வழக்கமாக தேய்த்து கழுவுவது போன்று கழுவினால் போகாது. எனவே ஜாரில் பிளேடுக்கு அடியில் நீண்ட நாட்கள் தங்கிய கரை நீங்க, 4 முட்டைகளின் ஓடுகளை ஒரு மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை கரை உள்ள மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது இதனுடன் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விடை சிறிதளவு சேர்க்கவும். இதை கம்பி நார் அல்லது ஸ்கிரப்பர் கொண்டு பிளேடுக்கு அடியில் தேய்த்து விடவும். இப்போது இதை தண்ணீரில் கழுவி எடுத்தால் பிளேடுக்கு அடியில் இருந்த கரை நீங்கி மிக்ஸி ஜார் பளிச்சென இருக்கும். 


சட்னியின் கூலிங் போக


நாம் காலையில் அல்லது முன்னாள் அரைத்த சட்னி, சாம்பார் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவ்வோம். சாம்பார் போன்ற குழம்புகளை சூடுப்படுத்தி சாப்பிடலாம். ஆனால் சட்னியை சூடுப்படுத்தி சாப்பிட முடியாது. சிலருக்கு சட்னியை சில்லென்று சாப்பிடுவதும் பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த டிப்ஸ். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரி வைத்து அதன் மீது ஒரு தட்டு அல்லது பாத்திரம் வைக்கவும். அதன் மீது சட்னியை கிண்ணத்துடன் வைக்கவும். கிண்ணத்தின் மீது மூடி போடவும். இரண்டு நிமிடம் மட்டும் தண்ணீரை சூடு படுத்தினால் போது. சட்னியில் இருக்கும் கூலிங் போய்விடும். இப்போது சட்னியை இட்லி அல்லது தோசையுடன் வைத்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க 


Egg Shell Tips: மிக்ஸி ஜார் சரியா அரைக்கலையா? கத்தரிக்கோல் சரியா வெட்டலையா? இதோ ஈசி டிப்ஸ்!


Kitchen Tips:ஃப்ரிட்ஜே இல்லாமல் காய்கறிகள் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகள்!!


Tender Coconut Drink :இளநீரில் ஜில்லென்று ஒரு பானம்.. ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் கேட்க தோணும்!