அடுப்பில் ஒரு பான்( pan) வைத்து இரண்டு இளநீர் தண்ணீர் சேர்க்கவும், அதில் 15 கிராம் கடல் பாசி, ஒன்றரை ஸ்பூன் கடல் பாசி சேர்க்கவும். கடல் பாசி கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இதை வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை குட்டி ட்ரேயில் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து செட் ஆனதும் கத்தியால் ஸ்கியூப்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இளநீர் ஜெல்லி தயாராகி விட்டது. 


காய்ச்சி ஆற வைத்து குளிர வைத்த திக்கான பால் 700 மிலி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். முன்னாள் இரவே ஊற வைத்து எடுத்து சப்ஜா விதைகள் 3 ஸ்பூன் சேர்க்கவும். இளநீரில் வழுக்கை ஒரு கைப்பிடி அளவு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின் நாம் ஏற்கனவே ஸ்கியூப்களாக வெட்டி வைத்துள்ள இளநீர் ஜெல்லிகளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் கரண்டியால் கலக்கி விட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து பரிமாறலாம். இந்த பானம் வெயிலுக்கு இதமாக ஜில்லென்று இருப்பதுடன் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். 


தர்பூசணியில் உள்ள வைட்டமின் பி6 செரோடோனின் உற்பத்திக்கு அவசியமானது.  செரோடோனின் பண்புகள் மகிழ்ச்சியின் உணர்வுகளை ஊக்குவிக்க உதவும் என்றும், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகள் ஏற்படும் போது குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. 


தர்பூசணியில் நிறைந்துள்ள மெக்னீசியம், அமைதியான உணர்வை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகிறது. மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட தர்பூசணி உதவும் என்று சொல்லப்படுகிறது. 


கவனம், நினைவாற்றல் மஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சரியான நீரேற்றம் அவசியம். தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து உடலை நீறேற்றமாக வைத்திருக்க உதவும். 


தர்பூசணியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிரம்பியுள்ளன.   தர்பூசணியை தவறாமல் உட்கொள்வது ஆண்டி ஆக்ஸிடண்ட் பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க 


Green Gram Laddu : புரதச்சத்து நிறைந்த பாசி பருப்பு லட்டு... எளிமையான செய்முறை இதோ!


Banana Rava Sweet : நேந்திர வாழைப்பங்கள் இருக்கா.. சூப்பரான ரவா வாழை பணியாரம் ரெடி..


Kerala Style Theeyal : கேரளா ஸ்டைல் தீயல்.. சாதத்துக்கு சூப்பர் காம்போ.. செய்முறை இதோ...