முட்டை ஓடுகளை நாம் எப்போதும் குப்பையில் தான் கொட்டுவோம். ஆனால் கீழ்க்காணும் டிப்ஸ்களை படித்தால் இனி நீங்கள் முட்டை ஓடுகளை தூக்கி வீச மாட்டீர்கள். 


கத்தரிக்கோல் கூர்மையாக


காத்தரிக்கோல்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்திய பின் மழுங்கி விடும். இதனால் பொட்களை வெட்டுவது கடினமாக இருக்கும். சாணம் பிடிக்க வேண்டுமானால் அதற்கு தனியே செலவு செய்ய வேண்டும். ஒரு ரூபாய் செலவில்லாமல் நீங்கள் கத்தரிக்கோலை மீண்டும் எப்படி கூர்மையாக மாற்றலாம் என பார்க்கலாம். கத்தரிக்கோலை கொண்டு முட்டை ஓடுகளை வெட்ட வேண்டும்.


கத்தரிக்கோலின் வெட்டும் அனைத்து பகுதியும் முட்டை ஓட்டை வெட்ட வேண்டும். அல்லது முட்டை ஓட்டை கொண்டு வெட்டும் பகுதியை தேய்த்துக் கொடுக்க வேண்டும். இப்போது இந்த கத்தரிக்கோல் கூர்மையாக மாறி விடும். அனைத்துப் பொருட்களையும் நன்றாக வெட்டும். 


மிக்ஸி ஜார் நன்றாக அரைக்க


மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடு மழுங்கி விட்டால் பொருட்களை சரியாக அரைக்காது. இதனால் சிலர் காசு கொடுத்து புதிய மிக்ஸி ஜார்களை வாங்குவார்கள். ஆனால் நீங்கள் மிக்ஸி ஜாரின் பிளேடை இந்த ஈசியான டிப்ஸை பயன்படுத்தி கூர்மையாக்கலாம்.  இதற்கு 5 முட்டையில் ஓடுகளை வெயிலில் காய வைத்து எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த பவுடரை எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் மிக்ஸி ஜார் பொருட்களை மிகவும் நன்றாக அரைக்கும்.  ஜார் புதியது போன்று வேலை செய்யும்.


பாத்திரத்தில் தீக்கரைகள் போக


இப்போது இந்த பவுடரை பயன்படுத்தி விடாப்பிடியாக தீக்கரைகளை கழுவலாம். சில பாத்திரங்கள் அடிப்பகுதியில் கருகிய நிலையில் இருக்கும். இதை வெறும் பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப் மற்றும் லிக்விட் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்துவது கடினம். தீக்கரைகள் உள்ள பகுதிகளில் அரைத்த முட்டை ஓடு பவுடரை கொண்டு லேசாக தேய்த்துக் கொடுக்கவும்.


பின் இதன் மீது தண்ணீர் தெளித்து ஒரு முறை கம்பி நார் கொண்டு தேய்த்து விட்டு, பின் பாத்திரம் தேய்க்கும் லிக்விடையும் அதனுடன் சேர்த்து கம்பிநாரால் நன்கு தேய்த்து விட்டு பின் தண்ணீரீல் கழுவவும். இப்போது பாத்திரம் பளிச்சென இருக்கும். 


மேலும் படிக்க 


Kothumai Appam: சுவையான கோதுமை அப்பம்... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...


Intermittent Fasting: இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கால் இதயத்துக்கு பாதிப்பா? ஆய்வில் இருப்பதும் அறிஞர்களின் கேள்வியும்!


Instant Poha Idly: மாவு இல்லையா? இன்ஸ்டண்ட் அவல் இட்லியும், சூப்பர் சட்னியும் இப்படி செய்து அசத்துங்க!