2024 தேர்தல் களம்


மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. இதில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா 1 இடங்களும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும் அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 33 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், சென்னையிலிருந்து முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கூட்டணியில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் வெற்றி பெறுவார். 


 


ராஜேந்திர பாலாஜி பேட்டி


"மோடி எங்கள் தாடி என கூறினீர்கள் இப்போது நிலை என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு."


அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி.விருதுநகரில் அதிமுக கூட்டணி வேட்பாளரும் திமுக கூட்டணி வேட்பாளர் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்துக்கு நல்ல மரியாதை, செல்வாக்கு உள்ளது. கருப்பு எம்.ஜி.ஆர்., என்ற பெயரும் பெற்றுள்ளார். எதிரில் நிறுத்தக்கூடிய வேட்பாளர்கள் பலம், பலவிதம் என்ன என்பதெல்லாம் பார்ப்பதில்லை. அண்ணா திமுக வேட்பாளர்கள் சுழன்று பணியாற்றுவார். விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ஆட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. எந்த சாதனைகளை கூறி திமுக ஓட்டு கேட்கும்.


பிரச்னைகள் சரி செய்யப்படும்


அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் முல்லை, காவிரி உள்ளிட்ட நதி பிரச்சினைகள் தீர்க்கப்படும். திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் தான்  தற்போதை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை. தேர்தல் வந்துவிட்டால் எதிரில் நிற்பவர்கள் யார் என்று கூட பார்க்க மாட்டார்கள் தொண்டர்கள் சுழன்று பணியாற்றுவார்கள்.


மக்களவைத் தேர்தல் நேரத்தில் டெல்லி முதலமைச்சர் கைது குறித்த கேள்விக்கு.


தேர்தல் நேரத்தில் கொலை நடந்தால் குற்றவாளியை கைது செய்யக்கூடாதா..? நீதிமன்றம் தான் கூற வேண்டும்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் விசாரணை சரிதானா.? எனக் கேட்டதற்கு. அரவிந்த் கெஜ்ரிவால் கைது சரிதான் என கூறவில்லையே.. நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்., விஜயபாஸ்கர் வீட்டில் எதுவும் இல்லை என அவரது தந்தை கூறியிருக்கிறார். அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளியா என்றார்.


- PBKS vs DC, IPL 2024: டாஸ் வென்ற தவான் தலைமையிலான பஞ்சாப்..! முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி அணி