தற்போது பெண்கள் அதிக அளவில் அலுவலக பணிகளுக்கு செல்வதால் நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால், காலை மற்றும் இரவு உணவு பெரும்பாலானோர் வீடுகளில் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும்.  இட்லி, தோசையை விரும்புவதும் வெறுப்பதும் அதற்கு கொடுக்கப்படும் சைடிஷ்ஷை பொறுத்தே அமையும்.


நம்மில் ஏராளமானோர், தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, போன்ற வழக்கமாக செய்யும் சட்னி வகைகளை தான் செய்து கொண்டிருப்போம். திரும்ப திரும்ப இதையே சாப்பிடும் போது உணவு மீது நாட்டமின்மை ஏற்படும்.


கர்நாடக கோலார் சட்னி:


எனவே நீங்கள் இட்லி, தோசைக்கு புதிதாக, சுவையாக எதையாவது சைடிஷ் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கர்நாடக கோலார் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வீட்டில் உள்ளவர்கள் கூடுதலாக இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதில் சேர்க்கப்படும் பூண்டு வேர்க்கடலை தக்காளி வரமிளகாய் ஆகிய பொருட்களில் கூட்டு கலவை உங்கள் நாவின் சுவை மொட்டுக்களை நிச்சயம் மலர செய்யும். வாங்க கர்நாடகா கோலார் சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 


எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன், வேர்கடலை 1 கப், பூண்டு - 20 பல், வரமிளகாய் - 10, சீரகம் -1 டீஸ்பூன், தக்காளி - 2, கறிவேப்பிலை, புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - சிறிதளவு


ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, வேர்க்கடலை, பூண்டு, வரமிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். வேர்க்கடலை நன்கு வறுபட வேண்டும், அதே நேரத்தில் கருகி விட கூடாது. மற்ற அனைத்துப் பொருட்களும் பாதி வறுபட்டதும் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, புளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இந்த கலவை நன்கு ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுத்து தாளித்தால் காரசாரமான்ன கர்நாடகா சட்னி தயார். 


( பூண்டை தோல் நீக்காமல் சேர்த்தால் சட்னி இன்னும் நன்றாக இருக்கும்) 


மேலும் படிக்க,


Chandrayaan 3: சொல்லி அடித்த இந்தியா..சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர் -இஸ்ரோ அறிவிப்பு


Aarudhra Gold : இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. துபாய் அரசுடன் ஒப்பந்தம்..உச்சகட்டம் செல்லும் ஆருத்ரா மோசடி வழக்கு..