CM Stalin: இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறது பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


”ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும்"


சென்னை சேதுப்பட்டில் கேரளா மீடியா அகாடமி மற்றும் சென்னை மலையாளி சங்கம் இணைந்து நடத்தும் ஊடக சந்திப்பு 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பத்திரிகையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய "the Challenging Mediascape" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.


பின்பு, இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "சில நாட்களுக்கு முன்பு ஓணம் கொண்டாடிய மக்களுக்கு மலையாளத்தில் வாழ்த்து சொன்னேன். கேரளாவில் சில மாதங்களுக்கு முன். நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று மலையாளத்தில் பேசினேன். இந்த விழாவில் பங்கேற்றத்தில் நான் பெருமை அடைகிறேன். கலைஞருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் பத்திரிகையாளர் அருண்ராம்.


’தி சேஞ்சிங் மீடியா ஸ்கேப்’ என்ற புத்தகத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். இன்று ஏராளமான பெண்கள் பத்திரிகை துறைக்கு வந்து சிறப்பாக செயல்படுகின்றனர்.  தமிழகத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறைவாக உள்ளதாக சிலர் தெரிவித்தனர். இதற்காக தான் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு லயலோ கல்லூரி உடன் அரசு இணைந்து இதழியல் பயிற்சி வகுப்பு வழங்கி வருகிறது.  ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்" என்றார்.


”இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறது பாஜக"


தொடர்ந்து பேசிய அவர், ”நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோருக்கு எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். சமத்துவத்திற்கு எதிராக உள்ளவர்களுக்கு திராவிடம் என்ற சொல்  பலருக்கு எரிச்சலை தருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு  இன்று ஆபத்து வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூக நிதியை சிதைக்க பார்க்கிறார்கள். இவை அனைத்தும் சிதைப்பதனால் இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறது பாஜக அரசு.


இந்தியாவை சிதைக்கப் பார்க்கும் பாஜகவை, அரசியல் இயக்கங்களாக நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவை காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும். ஆட்சிக்கு வந்தபின், அரசியலமைப்பு சட்டம் தான் தனது வேதம் என நாடாளுமன்றம், அரசியலமைப்பு சட்டத்தை வணங்கியவர் பிரதமர். தற்போது அரசியில் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவே பிரதமர் செயல்பட்டு வருகிறார்.  தமிழ்நாடும், கேரளமும் நாட்டை காக்கும் முயற்சியில் இரட்டை சூழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும்.  தமிழ்நாடும், கேரளமும் நாட்டை காக்கும் முயற்சியில் இணைந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியலை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்




மேலும் படிக்க 


CM Stalin On Marimuthu:"மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மாரிமுத்து” முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி..!