ஜப்பானிய பானங்கள் நிறுவனமான கிரின் ஹோல்டிங்ஸ், ஒரு வித்தியாசமான மற்றும் ஆச்சர்யமூட்டக்கூடிய மின்சார கரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பூனின் சிறப்பம்சம் என்னவென்றால், உணவுகளில் உப்பு பயன்படுத்த தேவையில்லை, இந்த ஸ்பூனானது செயற்கையாக உப்புச் சுவையை ஏற்படுத்துகிறது.  


மின்சார ஸ்பூன்:


இந்த ஸ்பூனைப் பயன்படுத்துவதன் மூலம், தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உப்பு நுகர்வானது,  மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 60 கிராம் எடை கொண்ட  மின்சார ஸ்பூனானது,  ரீ சார்ஜபிள் லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது உப்பு இல்லாமல், நாக்கிற்கு உப்பு சுவையை கொடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.


இதனால் பயனருக்கு உண்மையான உப்பு இல்லாமல் உப்பு சுவை கிடைக்கும். உப்பு உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் பிற நோய்களை தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


விற்பனை:


கிரின் ஹோல்டிங்ஸ் இந்த மாதம் 200 எலக்ட்ரிக் உப்பு கரண்டிகளை மட்டும் ஆன்லைனில் விற்பனைக்காக முதற்கட்டமாக வெளியிடுகிறது.ஒரு ஸ்பூனின் விலையானது, $127க்கு ( ரூ. 10, 500 ) விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.


பின்னர் ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனையாளரிடம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் 10 லட்சம் விற்பனைகள் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.   


வைரல் ஸ்பூன்: 


இந்நிலையில், ஜப்பான் கண்டுபிடிப்பான மின்சார ஸ்பூன் குறித்து பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றும் சில தீமைகள் இருந்தாலும் நன்மைகள் பல உள்ளன என்றும் சிலர் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. 


அதிலும் ஒரு பயனர், கவுண்டமணி காமெடியில் வருவதை போல ஜப்பான்காரன், ஜப்பான் காரன்தாயா என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். 


Also Read: Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..


Also Read: 125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!