தமிழ்நாடு:



  • வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது; தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

  • தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா..? வாக்குகளுக்காக அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

  • கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் - போக்குவரத்துத்துறை தகவல்

  • ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு

  • 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலி; தயார் நிலையில் 296 வீரர்கள் அடங்கிய 10 பேரிடன் மீட்பு குழுக்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • 6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கடிதம்

  • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

  • தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி நீரை திறக்க கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  • செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே, பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர்  படுகாயம் அடைந்துள்ளார்.


இந்தியா: 



  • வெறுப்பை தூண்டும் விதமாக பேசும் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

  • இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகளில் உடல் உறுப்புகளுக்காக 200க்கும் மேற்பட்டோர் ஈரானுக்கு கடத்தல் - கேரள போலீஸ் விசாரணையில் அதிர்த்தி தகவல்

  • சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல், வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

  • பகை என்னுடன்தான் உள்ளது, என்னை துஷ்பிரயோகம் செய்யுங்கள். ஆனால் இந்த நாட்டு மக்களை துஷ்பிரயோகம் செய்தால், யாரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என அமித்ஷா பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்

  • ராஜஸ்தானின் முன்னாள் அமைச்சரும், பரத்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான விஸ்வேந்திர சிங், தன்னை சித்ரவதை செய்ததாக தனது மனைவி மற்றும் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 


உலகம்: 



  • ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையில் தளவாட சிக்கல்கள் காரணமாக ஈரானுக்கு உதவி செய்ய முடியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  • அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு.

  • நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்ட் கோரிக்கைக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

  • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக குலுங்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பலருக்கு காயம் 


விளையாட்டு: 



  • நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் தகுதிச்சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் அணியாக கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

  • ஐபிஎல் 2024: இன்றைய எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்ரான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.

  • ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

  • ஆசிய ரிலே பந்தயத்தில்  4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றது.