வொண்டர்லா தீம் பார்க் ( wonderla theme park )


இந்தியாவில் முன்னணி தீம் பார்க்  நிறுவனமாக வொண்டர்லா தீம் பார்க்  ( wonderla  ) நிறுவனம் திகழ்கிறது. கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில்  இந்த நிறுவனத்திற்கான கிளைகள் உள்ளன.  விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,  வொண்டர்லா தீம் பார்க் செல்வது வழக்கம்.


குறிப்பாக இங்கு இருக்கும் சில விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு, மிகவும் பிடிக்கும் என்பதால்  தமிழ்நாட்டில் இருந்தும் பிற மாநிலங்களுக்கு  வொண்டர்லா தீம் பார்க்கிற்காக பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுக்கின்றனர்.




தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான   புரிந்துணர்வு ஒப்பந்தம், அரசு மற்றும் வொண்டர்லா நிறுவனம் இணைந்து போட்டிருந்தது. ஒரு சில காரணங்களால் பணிகள் உடனே துவங்க தாமதமானது. அதேபோன்று  கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும்   அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.


சுற்றுலாத்துறை


கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாடு அரசும் சுற்றுலாத்துறை மீது கவனம் செலுத்த துவங்கி உள்ளது.  அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது.  அந்த வகையில் சமீபத்தில்  தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் அமைப்பவர்களுக்கு ஒற்றை சாளர  முறைப்படி அனுமதி வழங்கப்படும் எனவும்  சுற்றுலாக் கொள்கையை தெரிவித்திருந்தது.




டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற உலகில் இருக்கும் பெரிய தீம் பார்க் போன்று, சென்னை புறநகர் பகுதிகளிலும் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது . இந்தநிலையில் சென்னை புறநகர் பகுதியில் இந்தியாவிலேயே மிகப்பெரிய "ரோலர் கோஸ்டர்"  அமைய உள்ளது.  இதன் மூலம் இந்தியாவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி உள்ளது.


 தமிழ்நாட்டில் வொண்டர்லா  ( chennai wonderla theme park )


இந்தியாவில் தனது ஐந்தாவது கிளையை  தமிழ்நாட்டில்  நிறுவும் பணியில் வொண்டர்லா  நிறுவனம்  ஈடுபட்டு வருகிறது . அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.  சென்னை புறநகர் பகுதியில்  பழைய மகாபலிபுரம் சாலையில் அதற்கான பணிகள்  துவங்கி நடைபெற்ற வருகின்றன. 


எங்கு அமைய உள்ளது ?


சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம்  சாலையில்,  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 510 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்காவூக்கு தமிழக அரசு அனுமதி   அனுமதியுடன் அதற்கான திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பிரம்மாண்டமாக அமைய இருக்கும் இந்த பொழுதுபோக்கு பூங்காவில்  பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வர அந்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் பல்வேறு புதுவிதமான,  வித்தியாசமான  அனுபவங்களை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.




சென்னை வொண்டர்லா  பொழுதுபோக்கு பூங்காவில் Bolliger & Mabillard எனும் கோஸ்டர் சென்னையில் வெற்றிகரமாக தரையிரங்கி உள்ளது.    ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணிக்கான அனுமதியும் கிடைத்திருப்பதால் விரைவில்   அதற்கான பணிகளும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோலர் கோஸ்டர்  அமைப்பதற்கு   தேவையான முன் அனுமதிகளும் தரப்பட்டுள்ளது.


 இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் ( India Largest Roller Coaster )


 தற்பொழுது சென்னையில் அமைய இருக்கும் ரோலர் கோஸ்டர்   இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்  லண்டன், நியூ யார்க்  போன்ற நகரங்களில் இருப்பதை போன்று "ரோலர் கோஸ்டர்" சென்னையிலும் அமைய உள்ளது.


ரோலர் கோஸ்டர்  அமைப்பதற்கான செலவு மட்டும் 80 கோடி ரூபாய் வரை  ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது  அனைத்து பணிகளையும் முடிக்கப்பட்டு  2026 ஆம் ஆண்டுக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  நிறுவன தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.