மேலை நாடுகளில் கழிவறைகளில் உடலை சுத்தம் செய்து கொள்வதற்கு கழிவறை காகிதங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் மட்டுமல்லாது பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கழிவறை காகிதங்கள் பயன்பாட்டில் இல்லை. காகிதங்களா? தண்ணீரா? எதனுடைய பயன்பாடு சிறந்தது?
- சிறுநீர் பாதை தொற்று
கழிவறை காகிதங்களைப் பயன்படுத்தும்போது அது பாக்டீரியா தொற்றுகளில் போய் முடிவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் யோனியின் திறப்பிலிருந்து சிறுநீர் பாதை வரை துடைக்கும்போது அது யோனியின் பாக்டீரியாக்களை சிறுநீர்ப் பாதைக்குள் தள்ளிவிடும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
- தண்ணீர் நிர்வாகம்
ஆசிய நாடுகளில் தண்ணீர் நிர்வாகம் மேலை நாடுகளைப் போல கட்டமைக்கப் பட்டிருக்கவில்லை. ஆகவே, கழிவறைக் காகிதங்களை கழிவறைக் குழிக்குள் தள்ளி தண்ணீர் ஊற்ற முடியாது. இங்கு, கழிவறையின் ஓரத்தில் வைக்கபட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் தான் பயன்படுத்திய காகிதங்களைப் போட முடியும்.
- எரிச்சலை ஏற்படுத்தலாம்
கழிவறைக் காகிதங்கள் மென்மையாக இருப்பதில்லை, குறிப்பாக சிறுநீர் பாதையில் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தும். எப்படி இருந்தாலும், கழிவறைக் காகிதங்கள் தண்ணீரைப் போல மென்மையாக செயல்படப்போவதில்லை. அதனால் டிஸ்யூ பயன்படுத்தினாலும் அதை சரியாகக் கையாளவும்
- சூழலுக்கு உகந்ததல்ல
அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடத்திற்கு 36.5 பில்லியன் கழிவறைக் காகித ரோல்கள் பயன்படுத்தப்படுகின்றன, இது 15 மில்லியன் மரங்களின் அழிவு. மேலும், இந்த காகிதங்களைத் தயாரிப்பதற்கு பெரும் அளவுகளில் தண்ணீர், ஆற்றல், பிளீச் தேவைப்படுகின்றன.
- கலாச்சாரக் குறியீடு
இஸ்லாமிய மற்றும் இந்து நாடுகளில் மதக் கலாச்சாரத்தின்படி, தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டும். அதனாலும் அந்த நாடுகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை
- சுத்தம்
காகிதங்கள் எப்போதும் முழு சுத்தத்தைத் தரப் போவதில்லை. ஆகையால், தண்ணீர் தான் காகிதங்களை விட நல்ல சுத்தத்தைக் கொடுக்கும்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்