சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையத்தில் தற்காலிக அடிப்படையில் 23 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


வேலைதேடி காத்திருக்கும் இளைஞர்களுக்காகவே சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக்கல்வி மையத்தில் உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழுநேர பணி அதே சமயத்தில் முற்றிலும் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன? கல்வித்தகுதி? தேர்வு செய்யும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





சென்னை பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள் – 23


துறைவாரியாக காலிப்பணியிட விபரங்கள்:


Tamil – 1


English – 1


Economics- 1


Political science & Public Administration – 1


Commerce – 1


Psychology – 2


Computer Science – 1


Mangement Studies – 2


Music – 2


French – 1


Journalism – 2


Sanskrit – 1


Saniva siddantha – 1


Geography (B.sc & M.Sc) – 1


Sociology (BA & MA) – 2


Christian studies – 1


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


NET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இதோடு 2009 ஜூலை 21 ஆம் தேதி முன்னர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் நெட் மற்றும் செட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://www.unom.ac.in/ என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


இதனையடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகலையும் இணைந்து அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


The Registrar,


University of Madras,


Chepauk,


Chennai – 600 005.


விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 28, 2022


தேர்வு செய்யும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் :


மாதந்தோறும் சம்பளம் ரூபாய் 30, ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.unom.ac.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.