பொங்கல் நெருங்கி வருகிறது. வீடுகளில் சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. சாம்பாருடன் சாப்பிட அசத்தலாக இருக்கும் வெண்பொங்கலை எப்படி சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


அரிசி – 1 கப்


பாசி பருப்பு – 1/2 கப்


தண்ணீர் – 5 கப்


உப்பு தேவையான அளவு


தாளிக்க:


எண்ணெய் – 3 மேசைக் கரண்டி


நெய் – 2 ½ மேசைக் கரண்டி


குறுமிளகு – 1 ½ டீஸ்பூன்


சீரகம் – 1 ½ டீஸ்பூன்


இஞ்சி – ஒரு இன்ச் அளவு, நறுக்கியது


கருவேப்பிலை – ஒரு கொத்து


முந்திரி – 5 – 7



தயாரிப்பு முறை:


அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக சிறிதளவு வறுத்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவை சிறிதளவு சூடானாலே போதும், வாசம் வரும்வரை வறுக்க தேவையில்லை. பின்பு, இரண்டையும் கழுவி ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பிட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். அடி பிடிக்காமல் இருக்க ஒரு பாத்திரத்தில் இடுபொருட்களை இட்டு அதை குக்கரில் வைத்து வேக விடலாம். பிரஷர் குறைந்தவுடன் குக்கரைத் திறந்து வெந்திருக்கும் பருப்பையும் அரிசியையும் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். இவை சூடாக இருக்கும்போது மட்டுமே மசிக்க முடியும்.


சீரகத்தையும் மிளகையும் ஒரு சுற்று அரைத்து எடுத்துக்கொள்ளலாம், முழுதாக வேண்டும் என்பவர்கள் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து முந்திரி, சிறிது அரைத்தெடுத்த சீரகம், மிளகு, நறுக்கி வைத்திருந்த இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அவை நன்கு வதங்கி வரும்போது வேக வைத்திருக்கும் பொங்கலை அதில் சேர்த்து இரு நிமிடங்களுக்கு நன்கு கிளறிவிட வேண்டும். இதை சூடான தேங்காய்ச் சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்