பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் கோரியோகிராஃபர் அமீர் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் தொடங்கியது. இதில் அமீர் வெற்றி பெற்று முதல் நபராக பிக்பாஸ் ஃபைனல்ஸில் நுழைந்தார். இதில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் அனைத்து போட்டியாளர்களுமே எவிக்ஷனுக்கான நாமினேஷனில் இருந்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் பணத்துடன் சிபி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் ராஜு, தாமரை, பிரியங்கா, நிரூப், பாவனி ஆகிய ஐந்து பேருமே நாமினேஷனில் இருந்தனர்.
இந்நிலையில் நிரூப் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலம் ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்றுவிட்டார். இதனால் தாமரை, ராஜு, பாவனி, பிரியங்கா ஆகிய 5 பேரும் நாமினேஷனில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தனர். அதன்படி குறைந்த வாக்குகள் பெற்ற தாமரை செல்வி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். தாமரை செல்வி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் ஆவார். கிராமத்தில் இருந்து வந்த தாமரை செல்வி பணத்தை விட பிக்பாஸ் வீட்டில் இருப்பதே மகிழ்ச்சி என்று கூறி வந்தார். 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுக்க முடிவு செய்த சிபி தாமரையிடம் நீங்கள் பெட்டியை எடுக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம், நான் கடைசி வரை இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கடைசி வரை செல்லாமல் இந்த வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் தாமரை செல்வி.
கிராமத்து பெண்ணாக இந்த போட்டியில் அடி எடுத்துவைத்து, பல நாடுகளுக்கு சென்று பல்வேறு அனுபவங்கள் பெற்று இருக்கும் போட்டியாளர்களுடன் மல்லுகட்டி நிற்கும் தாமரை செல்விக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தாமரைச்செல்வி அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் தற்போது அதிக அளவில் பிரபலம் அடைந்து விட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் உள்ளே செல்வதற்கு முன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாடக கலைஞர்களுக்கும் நாடக கலை ரசிகர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன், என் பெயர் தாமரை செல்வி, நான் 22 வருடமாக நாடாகத்துறையில் இருக்கிறேன், எனக்கு இதுவரை ஆதவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி, இப்போது நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லப்போகிறேன், அதிலும் எனக்கு தங்களின் நல்லாதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.", என்று கூறியிருக்கிறார்.