யோகா என்பது ஒரு உடலுக்கு மட்டுமல்ல, அது நம் மனதுக்குமான பயிற்சி. யோகா நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. உடல் நலனை சீர்படுத்துவதன் மூலம் நம்மை மன அழுத்தமில்லாமல் உலவ வைக்கிறது. இத்தகைய யோகா பயிற்சியுடன் நம் மனதை இன்னும் இலகுப்படுத்தும் இசை கலந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்?
இசை என்பது சிகிச்சையின் ஒரு வடிவம் என்றும், இசையும் ஒரு வகை யோகா என்றுமே கூறுகிறார்கள் பல யோகா பயிற்றுநர்களும். எனவே, இரண்டையும் இணைப்பது ஒருவருக்கு மகத்தான உள் அமைதியைத் தரும். இச்சூழலில் யோகா தரும் ஆற்றலை இசை எவ்வாறு மேலும் மேம்படுத்துகிறது எனத் தெரிந்துகொள்வோம்!
இசையின் பின்னணியில் செய்யும் செயல்
நம் வாழ்வு மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்த இசை என்றுமே ஒரு சிறந்த வழி. இத்தகைய இசையை நாம் செய்யும் ஏதாவது ஒரு செயலின் பின்னணியில் ஒலிக்க விட்டால், நாம் அச்செயலை இன்னும் சிறப்பாக செய்வோம். அந்த வகையில் யோகா செய்யும்போது இசையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது நம் மனது மற்றும் உடலுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.
சலனங்களைக் குறைக்கும்
ஒருவர் அமைதியான சூழலில் யோகா செய்ய முற்படும்போது பொதுவாக மனதில் கூச்சல்களும், சலனங்களுமே அதிகரிக்கும், எனவே மென்மையான கருவி இசையுடன் ஒருவர் பயிற்சி மேற்கொண்டால் அது சஞ்சலங்களைக் குறைத்து நம் மனதை மேலும் ஒருங்கிணைக்க உதவுகிறது.
பிடித்த பாடல்
உங்கள் மனநிலையை மேம்படுத்த உங்களுக்கு பிடித்த பாடல் மட்டுமே தேவை. யோகாவுடன் இந்தப் பாடல்கள் கலக்கும்போது அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு யோகாவின் நன்மைகளை உடலுக்கு முழுமையாகத் தருகிறது. மேலும் அப்பாடல் உந்துதலாக அனைத்து ஆசனங்களையும் ஒரு நல்ல மனநிலையில் மற்றும் மிகச் சிறந்த முறையில் செய்ய உதவும்.
இசையின் தாள ஒலியோடு இணைந்து சுவாசிக்கும்போது ஒருவர் முழுமையாக மகிழ்ச்சியுடன் சுவாசிக்கிறார். இதனால் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகி நம்மை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இசையும் யோகாவும் இணைந்து உணர வைக்கின்றன.
மேலும் படிக்க : Watch Video: நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்.. ஒரே இரவில் மீண்டும் கட்டிய இந்திய ராணுவம்!
மேலும் படிக்க : ஒரு மாதத்திற்கு முன்பு கடித்த நாய்... உடலில் பரவிய ரேபிஸ்... சிகிச்சை பெற்றும் மரணித்த 18 வயது மாணவி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்