மனைவியுடன் கேலி செய்து சிரித்து கொண்டிருந்த கணவர், 10 நிமிடத்தில் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டாம் ஸ்லேமேக்கரை 2019 ஜனவரியில் உயிரிழந்தார்.
திருமணமாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு தனது 37 வயதில் லீன் ஸ்லேமேக்கர், தனது கணவரை இழந்தார். உயிரிழப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு கூட, லீன் ஸ்லேமேக்கருடன் டான் சிரித்து கேலி செய்து கொண்டிருந்தார். 40 வயதில் அவர் அகால மரணம் அடைந்தார்.
இச்சூழலில், தன்னை போலவே திடீரென்று துணையை இழந்த மற்றவர்களுக்கு துக்கத்திலிருந்து வெளியே வருவதற்கு வழி இருக்கிறது என்பதை உணர்த்தி வருகிறார்.
இதையும் படிக்க: போன் செய்த மோடி...கட்சியிலிருந்து விலகிய 8 மாதங்களில்...பாஜகவில் இணையும் அமரீந்தர் சிங்?
இங்கிலாந்து சோமர்செட்டைச் சேர்ந்த லீன் இதுகுறித்து கூறுகையில், "ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக அவரை தெரியும். ஆனால் திருமணமாகி நான்கு மாதங்களில் அவர் உயிரிழந்து விட்டார். அவர் மிகவும் வெளிப்படையாகவும் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். அவரது இறப்பு ஒரு அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரியான விஷயம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது நடக்கும்.
நான் என் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்தேன். நான்கு மாதங்கள் உண்மையான அன்பைக் கண்டேன். பின்னர் என் கணவர் திடீரென்று என் கண் முன் இறந்தார்.
2017 இல் கிறிஸ்துமஸ் விடுமுறையில், லீனை காதலிப்பதாக டாம் வெளிப்படுத்தியுள்ளார். ஒருவரையொருவர் நன்றாக அறிந்திருந்ததனர். ஒரே தெருவில் வசிப்பதால் அவர்கள் நெருக்கமாகினர். ஒரே வருடத்தில், இருவரும் காதலிக்க தொடங்கினர். லீனை காரில் அழைத்து சென்று அவருக்கு உதவு செய்து வந்துள்ளார் டாம்.
ஒரு நாள் இரவு, பப் சென்றபோது லீனின் காரை டாம் தெரியாமல் மோதிவிட்டார். அங்கிருந்து தான் அவர்களிடையே காதல் மலர்ந்தது. 2017 ஆம் ஆண்டில், தனது குழந்தையின் முன்னிலையில் லீன்னை டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொள்வதற்கு முன், ஒரு வருடமாக இருவரும் டேட் செய்தனர். மேலும் ஒரு வருடத்திற்குள் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்