தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 50 மிலிசுண்டைக்காய் வத்தல் – ¼ கப் வெள்ளைப் பூண்டு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம்தக்காளி – 2புளி – நெல்லிக்காய் அளவுகருவேப்பிலை – ஒரு கொத்து கடுகு – ½ தேக்கரண்டிசீரகம் – ½ தேக்கரண்டிமிளகாய் தூள் – 2 தேக்கரண்டிமல்லித்தூள் – 2 தேக்கரண்டிசீரகத்தூள் – ½ தேக்கரண்டிவெந்தயம் – ¼ தேக்கரண்டிமஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுவெல்லம் – சிறிதளவு

செய்முறை

சுண்டக்காய் வத்தலை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து சுமார் 15-இல் இருந்து 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.  

ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில், கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் தோல் உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வதங்கியதும், சின்னவெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

மிக்சியில் சேர்த்து அரைத்தெடுத்த வெங்காயம், பூண்டு வதக்கிய கலவையில் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

தக்காளியின் பச்சை வாசனை போனதும்,  உப்பு, சீரகத்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை வதங்கியதும் புளி தண்ணீர் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடி கொதிக்க விட வேண்டும்.

பின்னர் தண்ணீரில் ஊற வைத்த சுண்டைக்காய்களை தண்ணீர் வடித்து விட்டு குழம்பில் சேர்த்து மீண்டும் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 

அவ்வப்போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும். இப்போது சிறிய துண்டு வெல்லத்தை பொடித்து குழம்பில் சேர்த்து கிளறி விட்டு மேலும் இரண்டு நிமிடம் வேக விட்டு இறக்கிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு தயார்.

மேலும் படிக்க 

மசூதியில் முன்னாள் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்: காஷ்மீரில் பதற்றம்

Vijayakanth: போண்டா மணி குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கிய விஜயகாந்த்: இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர்கள்

Ritika Singh on Sakshi Malik: இதயம் நொறுங்குகிறது - சாக்‌ஷி மாலிக்கிற்காக பொங்கிய ரித்திகா சிங்