உகாதி என்பது தொலுங்கு புத்தாண்டாகும். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உகாதி கொண்டாட்டத்தின் போது இந்த பச்சடியை செய்வது வழக்கம். இந்த பச்சடி உவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகள் நிறைந்தது. உகாதி கொண்டாடும் மக்கள் காலையில் குளித்து முடித்த பின் பச்சடி செய்து சாமிக்கு படைத்து விட்டு. இதை சாப்பிட்ட பிறகே மற்ற உணவுகளை சாப்பிடுவது வழக்கம். நாம் இந்த 6 சுவைகளை சம அளவில் சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும். இப்போது நாம் அறுசுவைகள் நிறைந்த உகாதி பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம். ’
செய்முறை
ஒரு கிண்ணத்தில், வேப்பம் பூ 1 ஸ்பூன், நறுக்கிய வெள்ளரிக்காய் 2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் துருவிய வெல்லம், 1 ஸ்பூன் புளி கரைசல், நறுக்கிய மா பிஞ்சு 2 ஸ்பூன், சாரப் பருப்பு, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதை ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒன்றரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு இந்துப்பு, சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இவற்றை கரண்டி வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் அறுசுவை நிறைந்த உகாதி பச்சடி தயார்.
முன்னதாக நாம் பச்சடி தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் பெரும்பாலும், இனிப்பு , காரம் சுவையை தான் அதிகமாக சாப்பிடுகிறோம். ஆனாலும் அறு சுவைகளையும் எடுத்துக் கொள்வது தான் உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும். எனவே இந்த உகாதி பச்சடி உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் படிக்க
House Hold Tips: இட்லி மிருதுவாக வர, ஜீன்ஸ் பேண்டை தைக்க - இதோ எளிய டிப்ஸ்
Household Tips: உடையாமல் முட்டை வேகவைக்க! பாத்திரத்தில் ஒட்டாமல் மாவு பிசைய - வீட்டுக் குறிப்புகள்!
Weight loss Journey: இளநீர் உடல் எடையை குறைக்க உதவுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?