இட்லி மிருதுவாக வர டிப்ஸ்


இட்லி மிருதுவாக வர நான்கு கப் இட்லி அரிசிக்கு 1 கப் உளுந்து ஊற வைக்க வேண்டும். அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவி விட்டு ஊற வைக்க வேண்டும். அரை கப் ஜவ்வரிசியை ஊற வைக்கவும். உளுந்தை பிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும். அரிசியுடன் ஜவ்வரிசியையும் அரைக்க வேண்டும். இப்படி மாவு அரைத்து இட்லி அவித்தால் இட்லி மிருதுவாகவும், வெள்ளையாகவும் இருக்கும். 


திராட்சையை கழுவ டிப்ஸ்:


திராட்சையை பூச்சி தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க, அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து திராட்சை பழத்தின் மீது அடிக்கப்பட்டிருக்கும். இதை சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுதுடன் தொண்டையில் தொற்று ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க. திராட்சையை சாப்பிடுவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் சேர்த்து திராட்சை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதில் பாதி எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். இதை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின் இதை நன்றாக கழுவி எடுத்து பின் தண்ணீரில் மீண்டும் கழுவ வேண்டும். இப்படி கழுவி திராட்சையை சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்கும். 


ஜீன்ஸ் பேண்டில் ஊசி எளிதில் நுழைய:


ஜீன்ஸ் பேண்டில் பட்டன் உள்ளிட்டவை பிய்ந்து விட்டால் நாம் அதை எளிதாக வீட்டிலேயே தைத்து விடலாம். ஆனால் ஜீன்ஸினுள் ஊசியை நுழைப்பது தான் சற்று சவாலாக இருக்கும். அப்படி ஜீன்ஸில் ஊசியை நுழைக்க உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், நீங்கள் ஒரு குளியல் சோப்பை எடுத்து ஊசியை அதில் நான்கு ஐந்து குத்தி எடுத்து பின்ன் ஜீன்ஸை தைத்தால் ஊசி அதில் ஈசியாக நுழையும். 


புதிய துடைப்பத்திலிருந்து தூசி நீங்க:


புதியதாக வாங்கிய துடைப்பத்தை கொண்டு அப்படியே வீடு பெருக்கினால் வீடு முழுவதும் தூசி ஆகி விடும். துடைப்பத்தை கைகளால் நன்றாக கசக்கி விட்டு தரையில் தட்ட வேண்டும். பின் துணி துவைக்கும் ப்ரெஷ் கொண்டு துடைப்பத்தின் மீது லேசாக தேய்த்து விட்டு பின் மீண்டும் ஒரு முறை தரையில் தட்டி விட்டு, பின் துடைப்பத்தை இரண்டு மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுக்கவும். 


மேலும் படிக்க 


வீட்டில் எறும்பு வராமலிருக்க! தண்ணீர் கேனில் துர்நாற்றம் வீசாமல் இருக்க! இதை மட்டும் பண்ணுங்க


Mango Jam: மாழ்பழத்தில் இந்த மாதிரி ஜாம் செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்!


வெள்ளை சட்டையில் உள்ள இங்க் கறை நீங்க.. ஃப்ரிட்ஜில் வாடை வராமலிருக்க டிப்ஸ்!