கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்கும் உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. நமது உடல் வியர்வையின் மூலம் தொடர்ந்து உடலிலுள்ள நீரை இழக்கிறது. அதோடு, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில் உடல் வறட்சி ஏற்படும். கோடையில் உடலில் போதுமான அளவுக்கு நீர்ச்சத்து இருக்குமாறு வைத்திருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இளநீர்:


எனவே, கொளுத்தும் வெப்பத்தை  சமாளிக்க சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,  குறிப்பாக, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் டயட் முறைகளை அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும்.


கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது சற்றே எளிதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதிகமாக பசியிருக்காது என்பதால் உடல் எடையை குறைக்க உதவும். பழங்கள், நீர்ச்சத்து மிக்க உணவுகளை டயட்டில் இருக்குமாறு பார்த்துகொள்ளவும். இளநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா? என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் உமா தெரிவிக்கும் அறிவுரைகளை காணலாம்.


உடல் எடை குறையுமா?


இளநீர் குடிப்பது மட்டும் உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லிவிட முடியாது என்கிறார் உமா. இதில் குறைந்த கலோரி இருக்கிறது. அதோடு,  இது  ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல்  ஹைட்ரேட் செய்யும் திறன் கொண்டது.  கூடுதலாக, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாமல் இருக்க உதவும். இதில்   எலக்ட்ரோலைட் அதிகம் உள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைப்பதை ஊக்கப்படுத்தும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கிறார்.


இளநீர் குடிப்பது மட்டும் நேரடியாக உடல் எடையை குறைக்காது என்றாலும், அது ஆரோக்கியமான எடை மேலாண்மை திட்டத்தின் உதவலாம் என்கிறார் மருத்துவர் ரிதுஜா .


நீர்ச்சத்து மிகுந்தது


உடல் எடையை குறைக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வழக்கமானதாகும். ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பசியைக் குறைக்கவும் உதவும். இளநீர் குடிப்பது இயற்கையாகவே உடலில் நீர்ச்சத்து கிடைக்கும். அதோடு, பல்வேறு வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றனர்.


கலோரிகள் குறைவு


வெயிலை சமாளிக்க அல்லது தாகம் எடுக்கும்போது, சோடா அல்லது செயற்கையான குளிர்பானங்களை சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றில் கலோரி அதிகம். அதோடு சர்க்கரை அளவு மிகவும் அதிகம். ஆனால், இளநீர் குறைந்த கலோரி கொண்டது. இதில் சராசரியாக, 8-அவுன்ஸ் (240-மில்லி லிட்டர்)-; சுமார் 45-60 கலோரி இருக்கிறது. இது எடை இழப்புக்கு உதவும்.


ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை


தேங்காய் நீர், இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்தியை ஆதரிக்கும். இதெல்லாம் உடல் எடையை குறைக்க மிகவும் அவசியமானவை.


 எலக்ட்ரோலைட் சமநிலை


இளநீர் எலக்ட்ரோலைட்டுகளின் இயற்கையான ஆதாரமாகும். இது உடலில் திரவ சமநிலையை பராமரிக்க முக்கியமானது. சரியான எலக்ட்ரோலைட் சமநிலை உடற்பயிற்சியின் போது உகந்த நீர்ச்சத்தை ஆதரிக்கிறது.  உடல் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.


பசியை குறைக்கலாம்


சில ஆய்வுகளின் படி, இளநீர் பசியை குறைக்கலாம் என கூறுகின்றனர். உணவுக்கு முன், இளநீரை குடிப்பதால், நீங்கள் முழுமையாக உணரவும், ஒட்டுமொத்தமாக குறைவான கலோரிகளை உட்கொள்ளவும் உதவும். இது காலப்போக்கில் எடை இழப்புக்கு பங்களிக்கும்.


உடற்பயிற்சிக்கு பெஸ்ட் ட்ரிங்


உடற்பயிற்சிக்குப் பிறகு இளநீர் அருந்துவது, வியர்வையின் மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை பெற உதவுகிறது. அவற்றை வேகமாக மீட்கவும் உதவுகிறது. இது  எடை மேலாண்மைக்கு அவசியமானதாகவும் இருக்கிறது.