சென்னையில் வெயில் தலை விரித்து ஆடுகிறது. விரைவில், வெயிலின் உக்கிரம் மெல்ல மெல்ல அம்பலமாகும். இந்த வெப்பத்திலிருந்து நம்மைக் காக்கும் பொருட்களில் முக்கியமானது தர்பூசணி பழங்கள். கடும் வெயிலில், வியர்வையில் ஊறியிருக்கும்போது ஒரு கீற்று தர்பூசணி மனதை சிறிது கணங்களில் உல்லாசப்படுத்தும். அப்படி என்ன தான் இந்த தர்பூசணி பழத்தில் இருக்கிறது?
உண்ணும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தர்பூசணியில் பெரும்பாலும் நிறைந்திருப்பது நீர்ச்சத்து தான் என்பது. அதுதான் உடலுக்கு உடனுக்குடன் புத்துணர்ச்சி தருகிறது. ஆனால், இதையும் தாண்டி தர்பூசணியில் பல அற்புத விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, தர்பூசணி பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்தத் தேவையான அடிப்படை சத்து என்பது அனைவருக்கும் தெரியும், வெயில் காலங்களில் அதிகரிக்கும் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க இது நமக்குத் தேவை ஆகிறது.
உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு கீற்று தர்பூசணியை எடுத்துக்கொள்ளலாம். இதனிடம் சிற்றுலின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் இருக்கும் அமினோ அமிலங்களை உடற்பயிற்சியின் போது முழுமையாகப் பயன்படுத்த உதவி செய்கிறது. உடற்பயிற்சியின் பின், இதை எடுத்துக்கொள்ளும் போது தசைகளில் ஏற்பட்ட சோர்வு, காயங்களை ஆற்றும் பண்பு நமக்கு உதவியாக இருக்கும்.
லைகோபீன் என்ற இதனிடம் இருக்கும் நுண்பொருள் தான் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காரணியாக இருக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும். மேலும், இது கண் பார்வைக்கு பயனுள்ளதாக இருக்கிறது, உடலின் நச்சுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான உடல் திரவ நகர்வை உறுதிபடுத்துகிறது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்