White Sugar : சர்க்கரை அசைவ உணவா? வெள்ளை சர்க்கரை பத்தி இந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

நாம் வேறெந்த உணவுமே எடுத்துக்கொள்ளா விடிலும், நமது உடலில் வேறெந்த கலோரிகளுமே இல்லாத போதிலும், ஜீனி நமக்கு இயங்க சக்தி கொடுக்கும்.

Continues below advertisement

வெள்ளை சர்க்கரை நமது சமையலறைகளில் நீங்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு வெள்ளை சர்க்கரைக்கு எதிரான பார்வையை அதிகரித்து வந்தாலும், இதனின் இடம் அசைக்க முடியாததாய் இருக்கிறது. இந்த ஜீனி குறித்தான சுவையான தகவல்களைப் பார்க்கலாம்.

Continues below advertisement

  1. இது ஆரம்பத்தில் இனிப்பு சுவைக்காகப் பயன்படுத்தப்படவில்லை

12-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜீனி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இது பணக்கார வீடுகளில், விலை உயர்ந்த பானங்கள், உணவுப் பதார்த்தங்கள் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, பட்டை, இஞ்சி கலந்து தயாரிக்கப்படும் மேலை மக்களின் ஆடம்பர பானங்களில் சுவை ஊட்டுவதற்காக இது பயன்பட்டது.

  1. இது சைவ உணவு கிடையாது

ஜீனியின் பளீரென்ற வெள்ளை நிறம் விலங்குகளின் எலும்பில் இருந்து எடுக்கப்படும் ஒரு நுண்பொருளினால் கிடைக்கிறது. ஆகையால், இது சைவ உணவல்ல.

  1. இதற்கு மருத்துவ பலன்கள் உண்டு

ஆரம்ப நாட்களில், ஜீனி மருந்தாகப் பயன்பட்டது. பார்வை குறைபாடுகளில் தொடங்கி காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது.

  1. இது உண்மையில் ஒரு உணவு பொருளே கிடையாது

கரும்பு மற்றும் அதன் சாறிலிருந்து பிரிக்கப்படும் சர்க்கரை நமக்கு உடனுக்குடன் வலிமை கொடுக்க வல்லது. நாம் வேறெந்த உணவுமே எடுத்துக்கொள்ளாவிடிலும், நமது உடலில் வேறெந்த கலோரிகளுமே இல்லாத போதிலும், ஜீனி நமக்கு இயங்க சக்தி கொடுக்கும். அதற்குக் காரணம் இதனிடம் குவிந்திருக்கும் சுக்ரோஸ்தான். கிட்டத்தட்ட 99.9 சதவிகிதம் இதன் கூறுகளில் சுக்ரோஸ் மட்டுமே உள்ளது. அதனால் தான், இது உணவுகளில் சேராத ஆனாலும் சக்தி கொடுக்கும் பொருளாக அழைக்கப்படுகிறது.

  1. ஜீனி ஈரலுக்கு நச்சாகும்

அளவுக்கு அதிகமாக ஜீனி எடுத்துக்கொள்வது, ஈரலில் அதிகமான கொழுப்பு உட்பொருளை விளைவிக்க வைக்கும். அதனால் மது எப்படி ஈரலை சீரழிக்குமோ அதே விளைவை சீனியும் ஏற்படுத்த வல்லது.  

மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க, இந்த இணைப்புகளை க்ளிக் செய்யவும்..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola