தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - கால் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் + அரை டேபிள் ஸ்பூன்
பூண்டு - 7 பல்
சீரகம்- ஒரு ஸ்பூன் + கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
புளி - சிறிய துண்டு
கறிவேப்பிலை தேவையான அளவு
கடுகு - அரை ஸ்பூன்
செய்முறை
2 கப் சின்ன வெங்காயத்தை உறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை மிக பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், கால் ஸ்பூன் வெந்தயம், 3 டேபிள் ஸ்பூன் அளவு கடலைப் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். பருப்பு சிவக்கும் அளவுக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.உரித்த 7 பூண்டு பல், ஒரு ஸ்பூன் சீரகம், 10 காய்ந்த மிளகாயை சேர்த்து, ஒரு சிறிய துண்டு புளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பின் இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கால் ஸ்பூன் சீரகமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள கலவையை இதில் சேர்த்து கலந்து விடவும். இதில் இரண்டு கப் தண்ணீர் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காயம் கிரேவி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க
Oats Venpongal: நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ்.. வெண்பொங்கல் இந்த மாதிரி செய்து அசத்துங்க...
Ghee Pumpkin : நெய் பூசணிக்காய் ரெசிபி.. இப்படி செய்தால் கூடுதலா சாப்பாட்டை காதலிப்பீங்க..