தேவையான பொருட்கள் 


மஞ்சள் பூசணி -1/2 கிலோ, பச்சை வேர்க்கடலை - 100 கிராம், தேங்காய் - 1/4 மூடி, வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 6 ,கடுகு - 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை - 3 கொத்து, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன். 


செய்முறை


முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,  அதில் கடுகு போட்டு பொரிந்ததும். அதில்  ஒரு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


பின் வெட்டிய மீடியம் சைஸ் பூசணிக்காயை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.


பச்சை வேர்க்கடலையை குறைந்த தீயில் வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து அதில் துருவிய தேங்காய் காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தேங்காய் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.


ஒரு மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை மற்றும் வறுத்த தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாயை வைத்து மீதம் இருக்கும் எண்ணையை சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் பூசணிக்காயை அதில் சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் மூடி வேக வைக்க வேண்டும்.


கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை இதில் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான நெய் பூசணி தயாராக இருக்கும்


மேலும் படிக்க


Chikmagalur Chutney : சிக்மகளூர் சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெசிப்பி இதோ.. கலக்குங்க..


மலேசியன் ஃப்ரைட் ரைஸ்! இந்த மாதிரி செய்து பாருங்க சுவை சூப்பரா இருக்கும்!


சுரைக்காயில் சுவையான கபாப் செய்யலாம் தெரியுமா? இந்த மாதிரி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்