பொங்கல் காலை உணவுக்கு மிகவும் ஏற்றது. திணை பொங்கல், வரகரிசி பொங்கல், கவுனி அரிசி பொங்கல் என பலவகை சத்தான பொங்கல் உணவுகள் உள்ளன. தற்போது நாம் ஓட்ஸ் பொங்கல் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம்.

  


தேவையான பொருட்கள் 


1/2 கப் பாசிப்பருப்பு







1 கப் ஓட்ஸ்








உப்பு 1.5 தேக்கரண்டி








தாளிக்க








3 டீஸ்பூன் நெய்








சீரகம் 1 டீஸ்பூன்








மிளகு 1 டீஸ்பூன்








பச்சை மிளகாய் 2








இஞ்சி நறுக்கியது 1 டீஸ்பூன்








முந்திரி 10- 15








கறிவேப்பிலை








செய்முறை


பாசிப்பருப்பை, நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் 11/4 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக வைத்து, அதை நன்றாக மசித்து விட வேண்டும். 








ஓட்ஸை எடுத்து, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.  2 கப் தண்ணீர் சேர்த்து ஓட்ஸை நன்றாக வேகவைத்துக்கொள்ள வேண்டும்.








இதனுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.








இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், சீரகம் 1 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2 , நறுக்கிய இஞ்சி 1 டீஸ்பூன், முந்திரி 10- 15 மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.







இதை பொங்கல் உடன் கலந்தால், சுவையான வெண்பொங்கல் தயார். 


ஒட்ஸின் நன்மைகள்


ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை தரும்.உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு. இந்த நார்ச்சத்து உகந்த இரைப்பை குடல் செயல்பாட்டிற்கு உதவும் என்றும் மலச்சிக்கலை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 


இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது எனவும் சொல்லப்படுகிறது.


ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான, நிறைவான உணவாகும். இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. தசையை உருவாக்க புரதம் அவசியம். எனவே இது தசைகளை வலுவாக வைத்துக்கொள்ள உதவும். 


மேலும் படிக்க


Thinai Pongal: சத்தான சிறுதானிய காலை உணவு... தினை பொங்கல் செய்முறை இதோ...


Karkandu Pongal: பொங்கல் ஸ்பெஷல்.. கற்கண்டு பொங்கல் ரெசிபி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...


Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க...