வாழைக்காயில் கூட்டு, வறுவல் வழக்கமாக செய்வோம். ஆனால் வடை செய்ததுண்டா?. பருப்பு வடை, வாழைப்பூ வடை, மெது வடை என பல வகைகள் இருக்கலாம். ஆனால் வாழைக்காய் வடை கொஞ்சம் ஸ்பெஷல் தான். வழக்கமாக வடைக்கு பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வைத்து சுவையான வாழைக்காய் வடை செய்யலாம்.  இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் டைமில் சாப்பிட நன்றாக இருக்கும். வாங்க இந்த வடையை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


வாழைக்காய் - 3







உப்பு - அரை ஸ்பூன்








பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது








கறிவேப்பிலை - ஒரு கொத்து








பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது








இஞ்சி - ஒரு துண்டு பொடியாக நறுக்கியது








சீரகம் - அரை ஸ்பூன்








மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்








மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்








அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்








எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு எண்ணெய்








செய்முறை


வாழைக்காயை தோலுடன் 2 துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.








வாழைக்காய் துண்டுகள் ஆறியதும் தோலை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்


நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்றாக வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.


கடாயில் வடையை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு  சூடாக்கி கொள்ள வேண்டும்.





பிசைந்த மாவில் இருந்து சிறிய அளவு எடுத்து வடை போல் தட்டி கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.