தேவையான பொருட்கள் 


 

1 கப் தினை அரிசி

1/4 கப் உடைத்த பாசி பருப்பு

½ கப் ஓம நீர் + 3 ¼ நீர்

தேவையானதுஉப்பு

தாளிக்க:

1/2 கப் நெய்

1 மேஜைகரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது

1 மேஜைகரண்டி மிளகு

1 மேஜைகரண்டிசீரகம்

20 முந்திரி

1 பச்சை மிளகாய், துண்டாக்கியது

20 கறிவேப்பிலை

சுண்டைக்காய் அளவு கட்டி பெருங்காயம்

 

செய்முறை


முதலில் ஒரு பேனில் (pan)  தினை அரிசி, உடைத்த பாசி பருப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.


ஒரு கிண்ணதில் வறுத்த தினை அரிசி, உடைத்த பாசி பருப்புடன் சிறிது, ஓம நீர் என, மொத்தம்  3 ¾ கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் சூக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும்.


ஒரு கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் பெருங்காய கட்டியை சேர்த்து 30 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விட வேண்டும். இப்போது பெருங்காயம் நன்றாக கரைந்து இருக்கும்.


அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் ஒரு பேன் வைத்து, ஒரு மேஜைகரண்டி நெய் சேர்த்து, முந்திரி, மிளகு, சீரகம்,  கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.


மிளகு வெடிக்கும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது பெருங்காயம் கரைத்த தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும். இது லேசாக கொதிக்க வேண்டும்.


வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற வேண்டும். மீதி நெய்யையும் பொங்கலோடு சேர்த்து கிளறி விட்டு தேவையான அளவு  உப்பு சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான பொங்கல் தயார். 


தினைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் மிக அதிகம். எனவே, கொழுப்பை குறைக்க மற்றும் தசைகளை பலப்படுத்த விரும்புவோருக்கு தினை ஒரு நல்ல உணவாகும்.


தினையின் பயன்கள்


தினையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.


தினையில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்க உதவும் என சொல்லப்படுகிறது.


தினையில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் E,   இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் துத்தநாகம் ஆகிய அனைத்து சத்துகளும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இன்றியமையாதவை.


எனவே தினையை உண்பது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். 


மேலும் படிக்க 


தினைகளில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.


உடல் வலிமையை அதிகரிக்க உதவும் குதிரைவாலி வெஜிடபில் பிரியாணி...செய்முறை இதோ...