தேவையான பொருட்கள் 


துவரம் பருப்பு - 1 கப் 


பாலக்கீரை - 1 கட்டு 


குழம்பு மிளகாய்த்தூள் - 2 


செய்முறை


ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும். குக்கரில் ப்ரஷர் இறங்கியதும் பருப்பை ஒன்றும் பாதியுமாக மசித்து விட வேண்டும். 


இதற்கிடையே ஒரு கட்டு பாலக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 


ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பொரிந்ததும் ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும், 2 கீறிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். 3 காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ள வேண்டும்.


பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் சிறிதளவு பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்து வதக்கி விட வேண்டும். தக்காளி வதங்கியதும் இதில் இரண்டரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூளை சேர்க்க வேண்டும். ஒரு வேளை தனி மிளகாய்த்தூளை சேர்ப்பதாக இருந்தால், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் பொடியின் பச்சை வாசம் போனதும், நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையை இதில் சேர்த்து வதக்கி விட வேண்டும்.


பின் மசித்து வைத்துள்ள பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ரெசிபி சற்று கெட்டிப் பதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.  இப்போது ஒரு கிராம் கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதிவந்ததும் இறக்கி கொள்ளவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.