சாதத்தில் சுவை சைட் டிஷ்ஷில் தான் உள்ளது. நீங்கள் பல்வேறு வகையான சைட்டிஷ் ரெசிபிகளை முயற்சி செய்து இருக்கலாம். ஆனால் நாம் இப்போது பார்க்க போகும் இந்த ரெசிபி நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். கேரளா ஸ்டைலில் சுவையான தீயல் ரெசிபி எப்படி செய்வது என்று தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். 


தேவையான பொருட்கள் 


சின்ன வெங்காயம் – 10
தேங்காய் – ஒரு மூடி
வெந்தயம்- 1/ 4ஸ்பூன்
சோம்பு-1/4 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
புளி – எலுமிச்சைப்பழ அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உளுந்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு-1/4 ஸ்பூன்
கருவேப்பிலை- 1 கொத்து
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் –தேவையான அளவு


செய்முறை


முதலில் தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். புளியை தண்ணீரில் ஊற வைத்து புளி கரைசல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானதும்,  துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து பின், மிக்சி ஜாரில் சேக்க வேண்டும். அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து,  பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.


வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், கெட்டியான புளி கரைசல் ஊற்றி சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.


ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பு கெட்டி பதம் வந்ததும் உப்பு சரி பார்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான தீயல் தயார்.


மேலும் படிக்க 


Amritsari Prawn Fry : சுவையான அம்ரித்சாரி இறால் பொரியல்.. ட்ரெண்டிங்கில் இதுதான் இப்போ களைகட்டுது..


உடல் வலிமையை அதிகரிக்க உதவும் குதிரைவாலி வெஜிடபில் பிரியாணி...செய்முறை இதோ...


Millet Pumpkin Dosa : உடல் எடை குறைக்கணுமா? சாமை - பூசணிக்காய் தோசை சாப்பிடுங்க.. செய்முறை இதோ...