தேவையான பொருட்கள் 


முழு பாசி பருப்பு- 1 கப்


நெய் - 3 ஸ்பூன் 


முந்திரி பருப்பு - 15


பாதாம் பருப்பு - 8


வெல்லம் - 1 கப் 


செய்முறை


1 கப் முழு பாசி பருப்பை ஒரு கடாயில் சேர்த்து நன்கு வாசம் வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை மீதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.  பின் இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் 6 முந்திரி மற்றும் 6 பாதாம் சேர்த்து நைசான பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும் இதில் சிறிது உடைந்த முந்திரி பருப்புகளை சேர்த்து வருத்து இதனுடன் அரைத்து வைத்துள்ள பாசி பருப்பு மாவையும் சேர்த்து 4 நிமிடம் லேசான தீயில் வறுக்க வேண்டும். 


அடுப்பில் ஒரு கிண்ணம் வைத்து அதில் 1 கப் அளவு பொடித்த வெல்லத்தை சேர்த்து அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை உருக விட வேண்டும். வெல்லம் உருகியதும் அதை வடிகட்டி, முக்கால் பாகம் அளவு வெல்ல கரைசலை மட்டும் வறுத்த மாவி சேர்த்து கலக்க வேண்டும்.  இதை நன்கு கரண்டியால் கலந்து விட வேண்டும். மாவு லட்டு பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மீதம் இருக்கும் வெல்லக் கரைசலையும் சேர்த்துக் கொள்ளலாம். 


இப்போது இதை உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு வாரம் வரையில் வைத்து சாப்பிடலாம். சுவை மிகவும் நன்றாக இருக்கும். 


பாசி பருப்பின் நன்மைகள்


பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இது உடல் எடையை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.  இதில்  புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. 


கர்ப்பிணிகளுக்கு இது ஏற்ற உணவு என்றும் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் சொல்லப்படுகின்றது. 


மேலும் படிக்க 


Pumpkin Morkuzhambu : வெள்ளைப்பூசணி மோர் குழம்பு.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்..


Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!


வெண்டைக்காய்- வேர்க்கடலை துவையல்... சாதத்துடன் வைத்து சாப்பிட சூப்பர் காம்போ!