இரண்டு நேந்திரம் வாழைப்பழத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். வாழைப்பழம் நிறம் மாறியதும் வதக்கும் கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும்.
இப்போது இதனுடன் கால் கப் ரவை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விடவும். இப்போது வாழைப்பழமும் ரவையும் ஒன்றோடு ஒன்று கலந்து வரும். அரை கப் துருவிய தேங்காயை இதனுடன் சேர்க்க வேண்டும்.
இதையும் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும் ( தேங்காய் சரியாக வதங்கவில்லை என்றால் உருண்டையை வைத்து சாப்பிட முடியாது. காய்ச்சிய இரண்டு கப் பாலை இதனுடன் சேர்க்கவும். இப்போது வாழைப்பழமும் பாலும் ஒன்றோடு ஒன்று கலக்குமாறு கரண்டியால் நன்றாக கலந்து விட வேண்டும்.
இப்போது 3 ஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். இதை நன்றாக ஒரு நிமிடம் கிளறி விட்டு இதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும்.
இதை உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் உருண்டைகளை சேர்த்து குலோப் ஜாமுனை பொரித்து எடுப்பதை போல் பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான நேந்திரம் வாழை ரவா உருண்டை தயார்.
இதை நீங்கள் பாட்டிலில் அடைத்து இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
நேந்திரம் வாழைப்பழத்தின் நன்மைகள்
நேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் உடல் பலவீனமாக இருப்பவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், உடல் மெலிந்து இருப்போர் ஆகியோர் நேந்திரம் பழத்தினை தினமும் எடுத்து வந்தால் உடல் எடை கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது ரத்த சோகையை சரி செய்ய உதவும் என்று சொல்லப்படுகின்றது.
மேலும் படிக்க
Shallot Gravy: சின்ன வெங்காயத்தில் இந்த மாதிரி கார குழம்பு செய்து பாருங்க - சுவை சூப்பரா இருக்கும்!
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! இப்படி செய்தால் ஒரு கரண்டி சாதம் எக்ஸ்ட்ரா சாப்புடுவிங்க!