தேவையான பொருட்கள் 


காளான் - இரண்டு பாக்கெட்


சோம்பு - அரை ஸ்பூன்


மிளகு - கால் ஸ்பூன்


சீரகம் - கால் ஸ்பூன்


எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்


பட்டை -1


ஏலக்காய் - 1


கிராம்பு - 1


பெரிய வெங்காயம்- 1 


சின்ன வெங்காயம் -100 கிராம் 


மஞ்சள் தூள் சிறிதளவு


மல்லித்தூள் அரை ஸ்பூன்


மிளகாய்த்தூள் கால் ஸ்பூன்


கறிவேப்பிலை ஒரு கொத்து 


செய்முறை


கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் ஒரு பட்டை, ஒரு எலக்காய், ஒரு கிராம்பு சேர்க்கவும். 


கால் ஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 100 கிராம் சின்ன வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நன்று சாஃப்டாக வதங்கி வந்ததும், இதில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள இரண்டு பேக்கெட் காளானை இதனுடன் சேர்க்க வேண்டும்.


இதை ஒரு கிளறு கிளறி விட்டு, சிறிதளவு மஞ்சள் தூள அரை ஸ்பூன் மல்லித்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பை சிம்மில் வைத்து வைத்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் வதங்கியதும் இதில் கால் டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். ( தண்ணீர் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்) 


இதற்கிடையே, ஒரு மிக்ஸி ஜாரில் கால் ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும். 


ஊற்றிய தண்ணீர் முக்கால் பாகம் வெந்து லேசான தண்ணீர் இருக்கும் போது நாம் அரைத்த பொடியை இதனுடன் சேர்த்து கிளறி விட்டு ஒரு நிமிடம் மட்டும் மீடியம் தீயில் வேக விட வேண்டும். 


உப்பை சரி பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.  கடைசியாக சிறிது நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் சுக்கா தயார். 


மேலும் படிக்க 


Andhra Paruppu Podi: காரசாரமான ஆந்திரா பருப்பு பொடி! சூடான சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்!


Pumpkin Morkuzhambu : வெள்ளைப்பூசணி மோர் குழம்பு.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்..


Ragi Idiyappam:கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்... இப்படி செய்தால் பெர்ஃபெக்ட்டா வரும்!