இட்லி தோசையை சட்னியுடன் வைத்து சாப்பிடுவதை விட சாம்பாருடன் வைத்து சாப்பிடுவது பெரும்பாலானோருக்கு பிடிக்கும். சாதத்துடன் வைத்து சாப்பிடுவதை காட்டிலும் டிஃபன் சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும். வாங்க சுவையான டிஃபன் சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 


சிறு பருப்பு  அரை கப்


துவரம் பருப்பு - அரை கப்


சின்ன வெங்காயம் -15


வெந்தயம் - முக்கால் ஸ்பூன்


சீரகம் - முக்கால் ஸ்பூன் 


தக்காளி - இரண்டு


மஞ்சள் தூள் சிறிதளவு


பெருங்காயத்தூள் -சிறிதளவு


சாம்பார் பொடி -இரண்டு ஸ்பூன்


மல்லித்தூள் - இரண்டு ஸ்பூன்


உப்பு -தேவையான அளவு


தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை


அரை கப் சிறு பருப்பு, அரை கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் சேர்க்கவும். இதனுடன் 15 சின்ன வெங்காயம், முக்கால் ஸ்பூன் வெந்தயம், முக்கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். வெட்டிய இரண்டு தக்காளி சிறிது மஞ்சள் தூள், சிறிது பெருங்காய தூள், சாம்பார் பொடி 2 டீஸ்பூன், 2 ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதில் இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரை மூடி விடவும். 


குக்கரை அடுப்பில் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும், சீரகம் சேர்க்கவும். பின் இதில் நறுக்கிய 1 வெங்காயம். கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை, நான்கு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு  சேர்க்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து இந்த தாளிப்பை அதில் சேர்த்து கலந்து விட்டு, சிறிது நறுக்கிய கொத்தமல்லித் தழையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சாம்பாரை 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இதற்கிடையே ஒரு சிறிய வெல்லத்துண்டை சாம்பாரில் சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடத்திற்கு பின் சாம்பாரை இறக்கி கொள்ளலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் இட்லி தோசையுடன் வைத்து சப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க 


Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!


TNPSC Group 4: இன்றே கடைசி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? ரூ.76 ஆயிரம் ஊதியம், 6,244 பணியிடம்!