தேவையான பொருட்கள்




பூசணிக்காய் கால் கிலோ



தயிர் கால் லிட்டர்

பச்சை மிளகாய்4 

சிறியவெங்காயம் 50 கிராம்

தனியா ஒரு டீஸ்பூன்

சீரகம் ஒரு டீஸ்பூன்

பூண்டு பல் 1

இஞ்சி சிறிய துண்டு

உப்பு தேவையான அளவு


மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை


செய்முறை



தேங்காய் துருவல், தனியா, சீரகம், மிளகாய், சிறிய வெங்காயம்,  4 பூண்டுப் பல், சிறிய இஞ்சி துண்டு 1,  மிளகு 2 ,இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.



வெள்ளை பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.





அரைத்த விழுதை கெட்டியான தயிருடன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து தயிர் கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும்.  நுரை வரும்வரை மிதமான சூட்டில் வேக விட வேண்டும். 



பின் மோர் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி சூடு தணிந்ததும், வேக வைத்த வெள்ளை பூசணியை மோர் குழம்பில் சேர்க்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கினால் சுவையான மோர் குழம்பு தயார். 


மோர் பயன்கள் 


தயிரில் செரிமானத்திற்கு தேவையான புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. தயிரை மோர் ஆக்கும்போதும் அந்த நன்மைகள் கிடைக்கின்றன. மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராகும் என்று சொல்லப்படுகிறது. 


நாம் உண்ணும் உணவின் ஆற்றலை நம் உடலுக்கு முழுமையாக பெற்றுத்தர வைட்டமின் பி2  தேவைப்படுகிறது. இந்த சத்தானது மோரில் அதிகம் நிறைந்துள்ளது. இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவுவதாக சொல்லப்படுகிறது.  உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.


உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மோர் உதவும் என்று சொல்லப்படுகிறது.  மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் நம் உடலில்  நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது என சொல்லப்படுகிறது. மோரில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் உடல் வறட்சியில் இருந்து காக்க உதவும். 


மேலும் படிக்க 


Thenkuzhal Murukku : மொறு மொறு தேன் குழல் முறுக்கு : இப்படி செஞ்சு பாருங்க சுவை அள்ளும்..


Badam Kesari: புரதச்சத்து நிறைந்த பாதாமில் நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேசரி செய்யலாம்.. செய்முறை இதோ!


Rice Chips : மக்களே.. சமைத்த சாதம் மீதமாகிவிட்டதா? வற்றலும், ஆப்பமும் ரெடி பண்ணலாம் வாங்க..