இனிப்பு பிரியர்களின் ஃபேவரெட் இனிப்புகளில் முக்கியமானது அல்வா. மற்ற இனிப்பு வகைகளை காட்டிலும் அல்வாவின் சுவை அலாதியாக இருக்கும். கேரட் அல்வா, ப்ரெட் அல்வா, பூசணிக்காய் அல்வா உள்ளிட்ட பல்வேறு அல்வா வகைகள் உள்ளன. இருந்தாலும் இப்போது நாம் பார்க்க போகின்ற அல்வா ரெசிபி கொஞ்சம் ஸ்பெஷல் தான்.


உருளைக்கிழங்கு-பீட்ரூட் அல்வா ரெசிபி எப்படி செய்வது? என்று தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். நாவில் வைத்ததும் கரைந்து விடும் சுவையில் இந்த அல்வா இருக்கும். இந்த அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்



  • உருளைக்கிழங்கு அரை வேக்காடு வேகவைத்து தோலுத்தது 1

  • பீட்ரூட் அரைவேக்காடு வேக வைத்து தோலுரித்தது 3 

  • 1/2 கப் சர்க்கரை

  • 125 கிராம் மாவா (கோயா)

  • 1/4 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் தூள்

  • 3/4 கப் பால்

  • 3 டீஸ்பூன் தூய நெய்

  • பாதாம் உரிக்கப்பட்டு, நறுக்கப்பட்டது


செய்முறை


1. உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்களை  திருகல் கொண்டு திருகி எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்று போல் திருகி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

2.ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.

 

3. இப்போது சர்க்கரையைச் சேர்த்து மேலும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தொடர்ந்து கிளறி விட வேண்டும். நன்றாக துருவிய மாவா (mawa) சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.

 

4. பின்னர் பால் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக விட வேண்டும். பாதி பாதாம் மற்றும் பாதி பச்சை ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
 

5.மீதமுள்ள பாதாம் மற்றும் பச்சை ஏலக்காய் தூள் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும். நீங்கள் விரும்பினால் வெள்ளி வார்க்( silver warq ) கொண்டு அலங்கரிக்கலாம். இப்போது உருளைக்கிழங்கு பீட்ரூட் அல்வா தயார்.

 

மேலும் படிக்க