அரிசி ரோட்லா ஒரு சுவையான குஜராத்தி டிஷ். இதை மிக குறைந்த நேரத்தில் ஈசியாக செய்து விட முடியும். இதை சப்பாத்தியைப் போலவே  குருமா உள்ளிட்ட சைடிஷ்களுடன் வைத்து சாப்பிடலாம். இந்த ரெசிபி பார்ப்பதற்கு சப்பாத்தி போன்று இருந்தாலும், வெங்காயம் , பச்சை மிளகாய், சாட் மசாலா ஆகியவற்றுடன் சேர்ந்த இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இப்போது ட்ரெண்டிங்கில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அரிசி ரோட்லா, மிகவும் சாஃப்டாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க அரிசி ரோட்லா எப்படி செய்வதென்று பார்க்கலாம்...


தேவையான பொருட்கள்



  • 1 கப் அரிசி

  • 1/2 கப் கோதுமை

  • 1 சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கியது

  • 1-2 பச்சை மிளகாய், நறுக்கியது

  • 1-2 தேக்கரண்டி தயிர்

  • 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

  • 1/2 தேக்கரண்டி சாட் மசாலா

  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா

  • உப்பு சுவைக்கேற்ப

  • கொத்தமல்லி இலைகள், நறுக்கியது

  • எண்ணெய் தேவையான அளவு


செய்முறை


1. முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி , கோதுமை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், தயிர், சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா மற்றும் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

 

2. இதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து மாவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கோதுமை அரைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என நினைத்தால் அவற்றை மற்ற பொருட்களுடன் கலக்குவதற்கு முன்பு தனியே அரைத்துக்கொள்ளலாம். 

 



3. இப்போது, ​​மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து ரோலிங் பின் பயன்படுத்தி சமமாக உருட்டவும்.

 

4. ஒரு தவா செட்டை குறைந்த மிதமான தீயில் சூடாக்கவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி தயார் செய்து வைத்திருக்கும் ரோட்லாவை வைக்கவும்.

 

5. இது பொன்னிறமாகவும் மிருதுவாகவும் வெந்து வரும்வரை வேகவைக்க வேண்டும். மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைக்க வேண்டும். உங்கள் அரிசி ரோட்லா சுவைக்க தயாராக உள்ளது.

 

மேலும் படிக்க