Sugarcane Pongal: அசத்தலான கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி? இப்படித்தாங்க!

சுவையான கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Continues below advertisement

இனிப்பு பொங்களிலேயே, சிறுதானிய பொங்கல், கவுனி அரிசி பொங்கல், ஓட்ஸ் பொங்கல் என பல வகைகள் உள்ளன. தற்போது நாம் சுவையான கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1/4 கப், பாசிப்பருப்பு - 1/8 கப், கரும்புச்சாறு - 1 1/2 கப் , வெல்லம் - 1/8 கப் , நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, உலர் திராட்சை - 10 ,  ஏலக்காய் பொடி - சிறிதளவு.

செய்முறை

கரும்பை தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் அதை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோராயமாக ஒன்றரை கப் கரும்புச் சாறு கிடைக்கும். 

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரிசியை கழுவி குக்கரில் சேர்த்து,  கரும்பு சாறை இதில் சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிரஷர் அடங்கியதும், குக்கரைத் திறந்து, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் முழுமையாக உருகி அரிசி உடன் கலக்கும் வரை கலந்து விட வேண்டும்.

பின் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி விட்டு,  மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி, உலர் திராட்சையைப் சேர்த்து வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.

கரும்புச்சாறு பயன்கள் 

கரும்பு சாறு பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும் என சொல்லப்படுகின்றது. வயதாகும் போது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது. உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும்,  இருக்க கரும்புச்சாறு உதவும் என கூறப்படுகிறது. 

கரும்புச்சாறு முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் சிறந்த ஆதாரமாக இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

மேலும் படிக்க 

Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க...

Karkandu Pongal: பொங்கல் ஸ்பெஷல்.. கற்கண்டு பொங்கல் ரெசிபி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...

Continues below advertisement