தேவையான பொருட்கள்


சேமியா - 1 பாக்கெட்


முட்டை - 2


கேரட் -1 


தக்காளி -1


வெங்காயம் - 1


கொத்தமல்லி - 1 கைப்பிடி


கறிவேப்பிலை - 2 கொத்து


பீன்ஸ் - 5 


பட்டை - சிறிய துண்டு


பிரிஞ்சி இலை - 1


கிராம்பு -1


எண்ணெய் தேவையான அளவு


உப்பு தேவையான அளவு


சோம்பு - 1 ஸ்பூன்


பச்சை மிளகாய் 2 


இஞ்சி- பூண்டு விழுது -1 ஸ்பூன்


செய்முறை


பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பெரிய சைஸ் தங்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


ஒரு பெரிய சைஸ் கேரட் மற்றும் 5 பீன்சை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


அடுப்பில் பான்(pan) வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சேமியாவை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


பின் அதே பானில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் செய்து கொள்ள வேண்டும். ( பொடிமாஸ் சற்று சிறு சிறு அளவுகளில் இருக்க வேண்டும்.) இதை தனியே எடுத்து வைத்து விட வேண்டும். 


அதே பானில்  2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, ஒரு பிரிஞ்சி இலை, ஒரு சிறிய துண்டு பட்டை, ஒரு கிராம்பு சேர்த்து, கால் ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடவும். ஒரு கொத்து கறிவேப்பிலை, கிறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும். அரைஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து லேசாக வதங்கியதும். நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்க்கவும். சற்று வதங்கியதும், 250 மிலி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தண்ணீரை கொதிக்க விடவும்.


தண்ணீர் கொதி வந்ததும், வறுத்த சேமியாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும். இதை கிளறி விட்டு, தீயை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். 5 நிமிடத்தில் சேமியா வெந்து விடும். அலுமினியம் அல்லது எவர் சில்வர் பாத்திரத்தில் சமைத்தால் 2 நிமிடத்திற்கு ஒரு முறை மூடியை திறந்து கிளறி விட வேண்டும்.வெந்ததும்  தயார் செய்து வைத்துள்ள முட்டை பொடிமாசை இதனுடன் சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.


மேலும் படிக்க 


Sweet Potato Halwa: நார்ச்சத்து மிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கில் தித்திப்பான அல்வா செய்து அசத்துங்க!


Pumpkin Cutlet: பூசணிக்காயில் ஒருமுறை இப்படி கட்லெட் செய்து பாருங்க... சுவையில் அசந்து போய்டுவிங்க...