தேவையான பொருட்கள்


வெங்காயம்- 2


தக்காளி -2 (நன்கு பழுத்தது)


வர மிளகாய் - 3


பூண்டு பல் பெரியது -6


சீரகம் - 1 ஸ்பூன்


கறிவேப்பிலை - இரண்டு கொத்து


காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்


உளுந்து - 1 ஸ்பூன்


கடுகு - 1 ஸ்பூன்


கொத்தமல்லி தழை - சிறிதளவு


செய்முறை 


ஒரு மிக்ஸி ஜாரில் 4 வர மிளகாய், 2 நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு, 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 


இப்போது நன்கு பழுத்த இரண்டு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 


இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும், இரண்டு வர மிளகாய், ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து வதக்கி விட்டு, இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.


இதை சிறிது வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை இதில் சேர்க்க வேண்டும். இதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு, பின் ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.


இதிலிருந்து கொதி வரும் வரை கிளறி விட்டு வேக வைக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். உங்களுக்கு சட்னி திக்காக வேண்டும் என்றால், ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் இட்லிமாவை சேர்க்கலாம். இதை குறைவான தீயில் 10ல் இருந்து 15 நிமிடம் வரை வேக விட வேண்டும். இது நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.


கடைசியாக சிறிது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி கொள்ளலாம். இது இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.