தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை(கசூரி மேத்தி) - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சோயா சங்க்ஸை 30 நிமிடங்கள் சுடு தண்ணீரில் ஊறவைத்து, பின் தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் 4 முறை அலசி சோயா சங்கில் உள்ள தண்ணீரை பிழிந்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் சோயா சங்க் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளியை சேர்த்து, சிறிது நேரம் வேக வைக்கவும். இதை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்.
இப்போது இஞ்சி -பூண்டு பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து சிறிது நேரம் கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் இதில் சோயா சங்க்ஸை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பின் அதில் காய்ந்த வெந்தய இலையை (கசூரி மேத்தி) சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பின் அதில் பால் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா சங்க்ஸ் கிரேவி தயார்.
மேலும் படிக்க