எதாவது டேஸ்டியாக சாப்பிட வேண்டும்; அதுவும் இரண்டு நிமிடங்களில்.. அதேதான்.. மேகி. எல்லாருக்கும் மேகி மிகவும் பிடித்த உணவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதுவும் மழைநாளில் சுட சுட ஒரு கப் மேகி என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள். சீஸ் மேகி, வெஜ் மேகி, முட்டை மேகி, இறைச்சி சேர்த்த மேகி, பஞ்சாபி தட்கா மேகி, சைனீஸ் ஸ்டைல் மேகி என பல்வேறு வகையான மேகி வகைகள் எல்லோராலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீஸ் இல்லாமல் மேகி செய்ய முடியுமா என்றால்.. இதோ அதற்கான ரெசிபி இருக்கு பாருங்க.


மேகி ராமென்


என்னென்ன தேவை?


மேகி - 2 பாக்கெட்


துருவிய கேரட் - 1


பொடியாக நறுக்கிய காளான் - ஒரு கப்


பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்


சில்லி ஃப்ளேக்ஸ் ஆயில் - ஒரு டீஸ்பூன்


சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்


வேகவைத்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்


வேகவைத்த முட்டை - 1


பெரியதாக நறுக்கிய பனீர், காளான் - ஒரு கப்


எண்ணெய் - தேவையான அளவு (சீஸ் பயன்படுத்தலாம்)


ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு


செய்முறை:


கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மேகி நூடுல்ஸை பொட்டு வேக விடவும். அதோடு கொஞ்சம் Peanut Butter அல்லது அரைத்த வெள்ளை எள் விழுது, சோயா சாஸ் சேர்க்கவும். மேகி வெந்து கொஞ்சம் திக் கன்சிஸ்டன்ஸி வரும். இப்போது மேகியை அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு பவுலில் கொஞ்சம் மேஜி சூப், மேகி சேர்த்து அதோடு சில்லி எண்ணெய் சேர்க்கவும். இப்போது, ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் காளான், பனீர் (டோஃபு கூட பயன்படுத்தலாம்) சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதிக்கி இறக்கவும். இந்த கலவையை மேஜியுடன் சேர்த்து அதில் துருவிய கேரட், வேகவைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி தழை, ஸ்பிரிங் ஆனியன், வேக வைத்த முட்டை சேர்த்தால் முடிந்தது. மேகி ராமேன் ரெடி.


சீஸ் இல்லாமல் க்ரீமி மேகி


என்னென்ன தேவை


மேகி - 2 பாக்கெட்


பால் - ஒரு லிட்டர்


எண்ணெய் / நெய்/ வெண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அரை அளவு வரும்படி காய்ச்சவும். அடுப்பில் மிதமான தீயில் கடாய் ஒன்றை வைத்து அதில் அரை லிட்டர் பால், மேகியை சேர்க்கவும். மேகி பாலில் நன்றாக வேகவிடவும். 5 நிமிடங்களில் மேகி வெந்து க்ரீமியாக கிடைக்கும். அப்போது இதில் மேகி மசாலாவை சேர்த்து கிளறி இறக்கினால் சீஸ் இல்லாத க்ரீமி மேகி ரெடி. நொடிகளில் சுவையான மில்க் மேகி எளிதாக செய்துவிடலாம். ட்ரை பண்ணி பாருங்க. 


தேங்காய் பால் மேகி


என்னென்ன தேவை?


மேகி பாக்கெட் - 1


தேங்காய் பால் - ஒரு கப்


வெண்ணெய் - ஒரு ஸ்பூன்


செய்முறை:


அரை தேங்காய் மூடியில் பால் எடுத்துகொள்ளவும். அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைத்து சூடானதும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஒரு டம்பளர் தேங்காய் பால் ஊற்றி மேகியை சேர்க்கவும். தேங்காய் பாலில் மேகி நன்றாக வெந்ததும் அதில் மேகி பவுடரை கொட்டி சிறிது நேரம் நன்றாக கிளறவும். 5 நிமிடங்களுக்குள் மேகி ரெடியாகிவிடும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம். சுவையான தேங்காய் பால் மேகி தயார். இதை வழக்கமாக மேகி செய்யும் முறையிலும் செய்யலாம். ஆனால், அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் மேகி வெந்ததும் முதல் நிலை தேங்காய் பால்  சேர்த்தால் அவ்ளோதான் சுவையாக இருக்கும்.


குறிப்பு:  இதை காலையில் வெறும் வயிற்றில், மாலை போன்ற நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிலருக்கு அதிகமாக தேங்காய் பால் / தேங்காய் எண்ணெய் சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தலைசுற்றல், குமட்டல் கூட இருக்கலாம். அதனால் பகல் நேரத்தில் சாப்பிடுவது நல்லது.